April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனா தொற்று 1.65 லட்சமாக குறைந்தது

1 min read

Corona infection in India drops to 1.65 lakh

3-5-2021
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தொடர்ந்து 3-வது நாளாக 2 லட்சத்துக்குள் கீழ் குறைந்துள்ளது. நேற்று காலையில் பதிவு 65 லட்சமாக குறந்தது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை குறைந்து வருகிறது. கடந்த 25-ந் தேதிக்கு பின்னர் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்தது. இப்போது 1.65 லட்சமாக குறைந்துள்ளது.

இந்திய கொரோனா நிலவரம் குறித்து இன்று காலை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 553 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,78,94,800 ஆக அதிகரித்துள்ளது.

3,460 பேர் சாவு

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,460 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,25,972 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 2,76,309 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,54,54,320 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 21,14,508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 21,20,66,614 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.