May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் வீட்டு முன் கழுதை தர்ணா/ நகைச்சுவை சிறுகதை

1 min read

Kannayiram with donkey/ short story by thabasukumar

24/6/2021

புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் கள்ள நோட்டை ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு வாலிபரின் சைக்கிளில் கண்ணாயிரம் வந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த மற்றவர்கள் சைக்கிளில் வந்தார்கள். ஒரே வாழ்க கோஷமாக இருந்தது. கண்ணாயிரத்துக்கு ஒரே வெட்கமாக இருந்தது. அடேய் அமைதியாக இருங்கடா சும்மா உசுப்பேத்தாதீங்க என்று சொல்லிப்பார்த்தார். அவர்கள் கேட்கவில்லை. விசில் வேறு அடித்தார்கள். காதை பிளந்தது.
கண்ணாயிரம் அவர்களை பார்த்து வாயை பொத்துங்கடா என்று சொன்னார். அதற்கு அவர்கள் சும்மா இருங்கள்.. போலீஸ் நிலையத்துக்கு போயிட்டு பத்திரமா திரும்பி இருக்கீங்க அதை கொண்டாட வேண்டாமா… என்று பதிலுக்கு சொன்னார்கள். ஏய் சிக்கலில் மாட்டிவிடாதீங்கடா… இன்ஸ்பெக்டர் நல்லவருடா டீ வாங்கிகொடுத்து அனுப்பினார் என்றார் கண்ணாயிரம்.
அப்படியா…எங்ககிட்டேயா ஏற்கனவே காது குத்தியாச்சு என்று சொல்லி சிரித்தனர்.
ஏங்கடா போலீஸ்காரர்கள் நல்லவர்களுக்கு நல்லவர். கெட்டவர்களுக்கு கெட்டவர் என்று வசனம் பேசினார் கண்ணாயிரம் பேசியதை பார்த்ததும் அனைவரும் வியந்து பார்த்தனர்.
சிறிது நேரத்தில் கண்ணாயிரம் வீடு வந்தது. கண்ணாயிரம் சைக்கிளை விட்டு இறங்கினார். வீட்டு முன் ஒரு பெண் கழுதை நின்று கொண்டிருந்தது இதுதான் இங்கே நிக்குது புரியலையே என்று விழித்தார்.
அது கண்ணாயிரம் வீட்டு சுவரில் மாட்டியிருந்த பஞ்சகல்யாணி ஆண் கழுதை போர்டை யே பார்த்து கொண்டிருந்தது.
இது என்னடா வம்பா போச்சு என்று கூறியபடி கண்ணாயிரம் அந்த கழுதையை விரட்டினார். ஆனால் அது ஓடவில்லை. கண்ணாயிரத்தை முறைத்து பார்த்தது. ம்.. இதை ஒண்ணும் செய்ய முடியாது… நமக்கு யாகம் கழுதை தான். அது ஓரமா நின்றுவிட்டு போகட்டும் என்று நினைத்தார். அந்த கழுதை திடீரென்று வீட்டு முன் படுத்துகொண்டது.
சுவரில் மாட்டியிருந்த பஞ்சகல்யாணி கழுதை படத்தை பரிதாபமாக பார்த்தது. என்ன அண்ண கழுதை உங்கள் வீட்டு முன்படுத்து தர்ணா பண்ணுது. என்ன தப்புபண்ணீனிங்க.. என்று கண்ணாயிரத்திடம் கேட்டனர்.
டேய்ங்களா.. நான் ஒரு தப்பும் பண்ணலடா… சும்மா எதாவது கதை கட்டிவிட்டுடாதீங்கடா.. என்று கண்ணாயிரம் கெஞ்சினார். அப்போது அவரது மனைவி என்னங்க வீட்டுமுன் கூட்டம்.. கழுதை வேற படுத்துகிடக்குது. என்ன கழுதையை வேற வாங்கிட்டு வந்திட்டீங்களா.. என்று கேட்டார். கண்ணாயிரம்… ஆ.. நான் வாங்கிட்டு வரலே. அதுவா வந்து படுத்து கிடக்குது. என்றார்.
உடனே அவரது மனைவி.. அந்த கழுதையை அடிச்சு விரட்டுங்க என்று கண்ணாயிரத்திடம் கூறினார். அதற்கு கண்ணாயிரம் மெல்லிய குரலில் கழுதை நமக்கு யோகம். வீடு தேடிவந்தசெல்வத்தை. விரட்ட வேண்டாம் என்று சொன்னார்.சரி..எப்படியும் போங்க… வீட்டுக்குள் வாங்க என்று அவரது மனைவி சொல்லி விட்டு சென்றார்.
கண்ணாயிரம் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். வீட்டுக்குள் போய் யோசிப்போம் என்று நினைத்து வீட்டுக்குள் சென்றார். போலீஸ் நிலையத்தில் நடந்ததை மனைவியிடம் கூறினார். டீ வாங்கிகொடுத்தாங்க என்று புகழ்ந்துதள்ளினார். அப்படியா என்று அவரது மனைவி வாய்பிளந்து கேட்டார். அப்போது கழுதை கத்தும் சத்தம் கேட்டது. என்ன ஆச்சு என்று கண்ணாயிரம் வெளியே ஓடிவந்தார். வீட்டு முன் பெரும் கூட்டம். கழுதையை சுற்றி நின்றார்கள். ஒருவர் கடலை, கடலை என்று கூடையை வைத்து கடலை விற்றுகொண்டிருந்தார். கழுதையின் தர்ணா போராட்டத்தை காண கூட்டம் வந்து கொண்டிருந்தது. டிராபிக் ஜாம் ஆகியது. என்னமோ ஏதோ என்று போலீஸ்காரர்கள் அங்கு ஓடிவந்த கூட்டத்தை ஒழுங்குபடித்தினர்.
கழுதையை போலீஸ்காரர்கள் விரட்ட பார்த்தார்கள். அது அவர்களை உதைக்க பாய்ந்தது. ஓய். கழுதைக்கு ஓனர் யாருடா. கூப்பிட்டு வாங்கடா என்று அங்கிருந்த வாலிபர்களை போலீசார் விரட்டினர்.
சிறிதுநேரத்தில் சலவைத்தொழிலாளியை இளஞர்கள் அங்கு அழைத்து வந்தனர். அவர் என்னமோ ஏதோ என்று ஓடிவந்தார்.தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்ட தனது கழுத்தை பார்த்தார். அவரை பார்த்ததும் கழுதை கனைத்தது.சுவரில் மாட்டியிருந்த பஞ்ச கல்யாணிகழுதை படத்தையே கூர்ந்து பார்த்தது. சலவை தொழிலாளி உற்சாகமாக போலீஸ்காரருக்கு பார்த்து எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணுமய்யா என்றார். போலீஸ்காரருக்கு கோபம்வந்தது. என்னைய்யாஉண்மை தெரிஞ்சாகணும் என்று கேட்டார்.
உடனே அவர், அய்யா, அந்த சுவரில் போர்டில் உள்ளாட்சி கல்யாணி கழுதை காணாமல் போன என்னுடைய ஆண் கழுதை அய்யா. அதன்படம் எப்படி இந்த போர்டில் வந்தது. எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும். என்றார்.
யோவ் அது உன் கழுதைதான்னு எப்படிசொல்லுற என்று போலீஸ்காரருக்கு அதட்டலாக கேட்டார்.
அய்யா என் கழுதைக்கு காது குத்தியிருக்கும். இது அதிர்ஷ்டபஞ்ச கல்யாணி. இந்த போர்டில் இருக்கிற கழுதை காதுல செம்பு கம்பி வளையம் தொங்குது பாருங்க. ஒரு வாரமா இந்த கழுதையை தேடிவர்ரேன்.
இந்த கழுத்தையை பார்த்து தான் அதன் ஜோடிபெண் கழுதை போராட்டம் பண்ணுது என்று கண்ணீருடன் கூறினார். என் கழுதையை கண்டுபிடித்து குடுங்க என்று கெஞ்சினார்.
போலீஸ்கார் அவரிடம் யோவ் அழாதய்யா ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடு.. விசாரிக்கிறோம் என்றார். சலவை தொழிலாளி ஒரு வாலிபரிடம் சொல்லி கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்தார்.போலீஸ்காரர் அதை வாசித்து விட்டு கண்ணாயிரம் என்ன இது என்றார். கண்ணாயிரம் அழாத குறையாக எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பாலத்துக்கு அடியில் ஒருவர் இந்த போர்டை விற்றார். நான் வாங்கினேன்அவ்வளவுதான் என்றார். எவிடன்சுக்கு அந்த போர்டை போலீஸ்காரர் கழற்றி னார். கண்ணாயிரத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
கண்ணாயிரம் நீபோர்டுவாங்கிய இடத்தை காட்டு என்று போலீஸ்காரர் அதட்டினார். கண்ணாயிரம் சரி என்றார். போலீஸ்காரர் அந்த போட்டுட்டுபோங்க முன்னே நடக்க கழுத்தையும் தர்ணா போராட்டத்தைகை விட்டு போலீஸ்காரர் பின்னால்சென்றது. அடுத்து கண்ணாயிரம், சலவைத்தொழிலாளி மற்றும் வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்றனர். பாலத்தை நோக்கிவேகமாக சென்றார்கள். பாலத்தின் அடியில் சென்றதும் போர்டு விற்பனை செய்பவனை கண்ணாயிரம் தேடினார். அங்கு யாரையும் காணவில்லை.

  • வே. தபசுக்குமார். புதுவை.

About Author

1 thought on “கண்ணாயிரம் வீட்டு முன் கழுதை தர்ணா/ நகைச்சுவை சிறுகதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.