இந்தியாவில் 50,040 பேருக்கு புதிதாக கொரோனா-1,258 பேர் சாவு
1 min read
Corona new to 50,040 people in India; 1,258 deaths
27/6/2021
இந்தியாவில் ஒரே நாளில் 50,040 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இனி மூன்றாம் அலைக்கான வாய்ப்பு இருப்பதால் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மாநில அரசுகள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 48,698 ஆக இருந்த நிலையில், இது முந்தைய நாளைவிட சற்று உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 3,02,33,183 ஆக உயர்ந்துள்ளது.
1,258 பேர் சாவு
நாடு முழுவதும் ஒரே நாளில் 1,258 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,95,751 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,92,51,029 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 57,944 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.31 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 96.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,86,403 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.