தமிழகத்தில் தினசரி கொரோனா 5,127 ஆக குறைந்தது; 91 பேர் சாவு
1 min read
The daily corona in Tamil Nadu is as low as 5,127; 91 deaths
27.6.2021
தமிழகத்தில் இன்று 5,127 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இன்று 91 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 37 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 46 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இன்றை கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 5,127 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,65,874 ஆக அதிகரித்து உள்ளது.
இதில் 2,904 பேர் ஆண்கள், 2,223 பேர் பெண்கள். இன்று மட்டும் தமிழகத்தில் 7,159 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,90,783 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவுக்க 91 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,290 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை
கோவையில்649 பேருக்கும், சென்னயைில் ஈரோட்டில் 530 பேருக்கும், திருப்பூரில் 316 பேருக்கு், சென்னையில் 248 பேருக்கும், தஞ்சாவூரில் 244 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருநெல்வேலியில் 45 பேருக்கு இன்று கொரோனா கண்டறிப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். தென்காசியில் 38 பேர் பாதித்த நிலையில் 3 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 72 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இறப்பு இல்லை.