April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் 46,148 பேருக்கு கொரோனா; 979 சாவு

1 min read


Corona for 46,148 people in India; 979 Death
28.6.2021
இந்தியாவில் தினசரி கொரோனா கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. ஒரு நாள் இறப்பும் 979 ஆக குறைந்தது.

46,148 பேருக்கு கொரோனா

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 46,148 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 02 லட்சத்து 79 ஆயிரமாக பதிவானது.
நேற்று ஒரே நாளில் 58,578 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 09 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 5.72 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரு நாளில் 979 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை 3,96,730 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில்

இன்று (திங்கட்கிழமை) காலை 10:20 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 18 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 லட்சத்து 38 ஆயிரத்து 862 பேர் பலியாகினர். 16 கோடியே 63 லட்சத்து 85 ஆயிரத்து 636 பேர் மீண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.