ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்; மீண்டும் எம்.பில். படிப்பு
1 min read
College enrollment will begin on August 1; Back to M.Phil. Study
1.7.2021
ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். எம்.பில். படிப்பும் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கல்லூரி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, பல்கலைக் கழங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. அதில், உயர் கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர். அதில், மாணவர் சேர்க்கை, நேரடி வகுப்புகள் நடத்துவது, தேர்வுகள், நிர்வாக செயல்பாடுகள், காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆகஸ்டு 1-ந் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும். 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
சென்னை பல்கலைக் கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.பில். படிப்பைத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்று துணைவேந்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் உள்ள முறைகேடுகளை விசாரிக்கக் குழுவை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஒற்றை சாளர முறையில் நடத்தப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியான முறையை கடைபிடிக்க வேண்டும்.
என்று அவர் கூறினார்.