June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 3,715 பேருக்கு கொரோனா ; 54 பேர் சாவு

1 min read

In Tamil Nadu, the corona dropped to 3,715 and 54 deaths

4.7.2021

தமிழகத்தில் இன்று கொரேனா பாதிப்பு 3,715 ஆக குறைந்தது. இன்று 54 பேர் உயிரிழந்து உள்ளனர்.

குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 54 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 3,715 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,00,002 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 2,130 பேர் ஆண்கள், 1,585 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 4,029 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,32,017 ஆக உயர்ந்துள்ளது.

54 பேர் சாவு

இன்று கொரோனாவுக்கு 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,059 ஆக அதிகரித்து உள்ளது.

கோவையில் 436 பேருக்கும், ஈரோட்டில் 330 பேருக்கும், சேலத்தில் 233 பேருக்கும், தஞ்சாவூரில் 218 பேருக்கும், திருப்பூரில் 217பேருக்கும் சென்னையில் 214 பேருக்கும், செங்கல்பட்டில் 188 பேருக்கும், வேலூரில் 157 பேருக்கும் நாமக்கல்லில் 128 பேருக்கும், திருவண்ணாமலையில் 129 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லையில் இன்று 30 பேருக்கும், தென்காசியில் 22 பேருக்கும், தூத்துக்குடியில் 42 பேருக்கும் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இந்த 3 மாவட்டங்களிலும் இன்று கொரோனா இறப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *