தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிளில் சென்று போராட்டம்
1 min read
Temujin treasurer Premalatha goes on a bicycle and struggles
5.7.2021
தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிளில் சென்று போராட்டம் நடத்தினார்.
பிரேமலதா போராட்டம்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் தொடந்து விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் தற்போதைய பெட்ரோல் விலை ரூ. 100 தாண்டியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய் ஆக உள்ளது.
இதேபோல் பல பகுதிகளில் டீசல் விலையுமே ரூ. 100 தாண்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் பாரிமுனையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிளில் சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.