May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

செம்பு போச்சே… கலங்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை சிறுகதை

1 min read

kannayiram / story by thabasukumar

5/8/2021
பவுர்ணமி பூஜையில் கலந்துகொண்ட கண்ணாயிரம் கோடாங்கி சவுக்கடி கொடுக்கிற கட்டம் வந்தபோது மோட்டார் சைக்கிள் வாலிபரை மாட்டிவிட்டுட்டு தப்பிவிட்டார். சவுக்கடி கொடுத்து முடிந்தவுடன் கறுப்பு கம்பளி உதவியுடன் மீண்டும் பூஜையில் கலந்துகொண்டார்.
அவர்முன் இலையில் உடைக்கப்பட்ட தேங்காய் இருந்தது. அந்த தேங்காயை கோடாங்கி தருவாரா மாட்டாரா என்ற ஏக்கத்தில் இருந்தார். கோடாங்கி ஏதோ மந்திரங்களை சொல்லி மீண்டும் கையில் சவுக்கு எடுத்தார். அதை பார்த்ததும் கண்ணாயிரத்துக்கு உடம்பு வியர்த்தது. சவுக்கை கோடாங்கி கையில் எடுக்கிறார் அடிப்பாரோ என்ற பயம் ஏற்பட்டது. கம்புளியை எடுத்து உடம்பை நன்றாக மூடிக்கொண்டார். கோடாங்கி ஆவேசமாக கத்தியபடி தரையில் சாட்டையை ஓங்கி அடித்தார். கண்ணாயிரம் கம்பளியை லேசாக விலக்கியபடி கோடாங்கியை உற்றுபார்த்தார். கோடாங்கி மீண்டும் சவுக்கை எடுத்து தரையில் அடித்தபடி உற்றா பார்க்கிறாய். தொலைத்துவிடுவேன் உன்னை என்றார் கோடாங்கி.
உடனே கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்தார். கோடாங்கி தன்னைத்தான் சொல்கிறார் என்று நினைத்து கண்ணாயிரம் கம்பளியை மீண்டும் இறுக்கி மூடிக்கொண்டார். அப்போது கோடாங்கி ஆவேசமாக என்ன முகத்தை மூடிக்கொண்டாயா உன்னை விடமாட்டேன் என்று சவுக்கால் மீண்டும் கீழே அடித்தார். முகத்தை மூடாதே. சொல்லுறன் மீண்டும் முகத்தை மூடுற. முகத்தை காட்டு என்று சவுக்கை ஓங்கி னார். கோடாங்கி தன்னைத்தான் சொல்கிறார் என்று நினைத்து கம்பளியை விலக்கி லேசாக முகத்தை காட்டினார். கோடாங்கி கோபமாக மோகினியே முகத்தை காட்டியது போதும். தண்ணீர் செம்பு க்குள் போ என்று கத்தினார். அப்போதுதான் கண்ணாயிரத்துக்கு புரிந்தது கோடாங்கி நம்மை சொல்லவில்லை. மோகினியை சொல்லி இருக்கிறார் என்று தெரிந்தது. கோடாங்கி தண்ணீர் செம்பை எடுத்து அப்படியே மேலே காட்டினார். பின்னர் கண்ணாயிரத்தை பார்த்து செம்பு தண்ணீரை பார். மோகினி தெரிகிறதா என்று கேட்டார். கண்ணாயிரம் உடனே ஒண்ணும் தெரியலையா என்று அதட்டினார். பின்னர் சவுக்கை கையில் எடுத்து இப்ப தெரிகிறதா என்று கேட்டார். கண்ணாயிரம் பயந்துபோய் தெரியுது, தெரியுது என்றார் கோடாங்கி சிரித்தபடி ம்.. கையில் சாட்டையை எடுத்தால்தான் சிலருக்கு கண்தெரிகிறது என்றார். பின்னர் செம்பு தண்ணீரை எடுத்து கொண்டு ஆற்றுக்குள் இறங்கினார். ஆற்றுநீரில் செம்பு தண்ணீரை கலந்துவிட்டார். மோகினியே போ. போ.. என்று அதட்டினார். ஆத்து தண்ணீரில் கோடாங்கி மகிழ்ச்சியாக குளித்தார்.
கண்ணாயிரம் உடைத்த தேங்காயை எடுத்து தின்னலாமா என்று யோசித்தார். ஆனால் சவுக்கடி க்கு பயந்து அமைதியாக இருந்தார்.

ஓ.. கோடாங்கி வரட்டும் கேட்டுவாங்கிககொள்வோம் என்றுநினைத்தார்.
கோடாங்கி குளித்துவிட்டு ஈரமான உடையுடன் கையில் செம்பு டன் அங்கு வந்தார். கண்ணாயிரத்தை பார்த்து சிரித்தார். கண்ணாயிரம் மெல்ல தேங்காய்கிடைக்குமா என்று கேட்டார். கோடாங்கி தேங்காயை அரிவாளால் மெல்லக் கீறி ஒருதுண்டை எடுத்து அவரிடம் கொடுத்தார்.
கண்ணாயிரம் அதை வாங்கிகடித்து சாப்பிட்டார். அடுத்துகண்ணாயிரத்துக்கு ஏதோ ஒன்றை வாங்க மறந்ததுபோல் இருந்தது. ஆ.. நினைவு வந்துவிட்டது.
தாயத்து.. ஆ.. தாயத்து.. என்று கத்தினார். கோடாங்கி என்ன சத்தம் என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம் எனக்கு தாயத்து தரவில்லை என்றார்.
கோடாங்கி கோபத்தில் தாயத்தை உன் இடுப்பில் கட்டிவிட்டேனே. அதை கீழே போட்டுவிட்டால் என்று கேட்டார். கண்ணாயிரம் நாம வசம் மாட்டிக்கிட்டோம். நாம் என்று நினைத்து மோட்டார் சைக்கிள் வாலிபருக்கு தாயத்து கட்டிவிட்டிருக்காரு. அதை சொல்ல முடியுமா. சமாளிப்போம் என்று முடிவு செய்தார்.
கோடாங்கியிடம் இன்னொரு தாயத்து இருந்தாகொடுங்க என்று சொன்னார். கோடாங்கியோ வேறு தாயத்து இல்லை என்றார்.
அப்படியா சரி என்று கண்ணாயிரம் கூறினார். அப்போது சேவக் கோழி நினைவுக்கு வந்தது. அந்த சேவக்கோழி என்னாச்சு என்று கேட்டார். அதற்கு கோடாங்கி சேவக்கோழி பத்திரமாக பையில் இருக்கிறது.
நாம் பூஜை முடிந்துபோகும்போது மோகினி நம்மை மடக்கினால் சேவக்கோழியை காட்டினால் மோகினி ஓடிவிடும் என்று கோடாங்கி கூறினார். கண்ணாயிரம் அப்படியா. சரி எங்க செம்பை தாங்க என்று கோடாங்கியிடம் கேட்டார். அவர் பவுர்ணமி பூஜை நடத்திய செம்பை வீட்டுக்கு எடுத்துட்டுபோகக்கூடாது. மோகினி கூட வந்திடும் என்றார். அப்படின்னா அந்த செம்பை என்ன செய்வீங்க என்றுகேட்டார். அந்த செம்பை என்னுடைய அலுவலக அறையில் அடுக்கிவைத்திருக்கிறேன்.
நான் எத்தனை பவுர்ணமி பூஜை செய்துள்ளேன் என்பதை செம்பை வைத்து எண்ணிவிடலாம். இது நூறாவதுபூஜை என்று நினைக்கிறேன். அது உங்களுக்கு அமைந்துள்ளது என்று கூறினார். கண்ணாயிரம் நான் தண்ணீர் குடிக்கிற செம்பு போச்சு என்று கண்களை கசக்கினார். கோடாங்கி ஒரு வாழைப்பழத்தை எடுத்து அவருக்கு கொடுத்தார். கண்ணாயிரம் பழத்தை உரித்து சாப்பிட்டார்.
மோகினிக்கு சிவப்பு வாங்கிய சேலையை என்ன செய்வீர்கள் என்று கண்ணாயிரம் கேட்டார். கோடாங்கி கோபத்தில் அதெல்லாம் கேட்கக் கூடாது. மோகினி கோபப்படும் என்றார்.
கண்ணாயிரம் அப்படியா என்றார். பொங்கல் பானையை என்ன செய்வீர்கள் என்று மீண்டும் கேட்டார். கோடாங்கி ஆத்திரத்தில் எல்லாத்தையும் கேட்கக்கூடாது. இங்கே உள்ளதை வீட்டுக்கு எடுத்து செல்லக்கூடாது. சரியா என்றார். அப்படின்னா தாயத்து கொண்டுபோக லாமா என்று கண்ணாயிரம் மடக்கினார். அது மந்திரிக்கப்பட்ட தாயத்து கொண்டுபோகலாம் என்றார் கோடாங்கி.
கோடாங்கியிடம் கண்ணாயிரம் மற்றோரு சந்தேகத்தை கேட்டார். ஏற்கனவே மோகினி இருந்த செம்பு தண்ணீரை ஆற்றுக்குள் ஊற்றிவிட்டு குளித்துவிட்டு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தீர்கள். இரண்டாவதுமுறையும் பூஜைசெய்துசாட்டையால் அடித்துவிட்டு செம்பில் உள்ள தண்ணீரை ஆற்றுக்குள் ஊற்றிவிட்டு குளித்துவிட்டு வந்தீர்கள். அதை ஏன் என்று கண்ணாயிரம் கேட்டார். அதற்கு கோடாங்கி விளக்கம் அளித்தார். முதலில் நடத்தியது முதல் கால பூஜை. இரண்டாவது நடத்தியது இரண்டாம்கால பூஜை என்றார்.

  • வே. தபசுக்குமார். புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.