May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

சவுக்கடியிலிருந்து தப்பிய கண்ணாயிரம்./ சிறுகதை

1 min read

Kannaayiram escaped the whip./Short story by Thabasukumar

30/7/2021
ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடிய கண்ணாயிரம் பேய்பாடலை கேட்டவுடன் கீழே மயங்கி விழுந்தார். அவரை கோடாங்கி தட்டி எழுப்பினார். கண்ணாயிரம் மெல்ல கண்ணை திறந்து தண்ணீ தண்ணீ என்றார்.
உடனே கோடாங்கி அங்கு நின்ற வாலிபரிடம் ஆத்திலிருந்து தண்ணீ கொண்டு வா என்றார். அந்த வாலிபர் பனை ஓலையை பட்டையைக் தண்ணீர் கொண்டு வர புறப்பட்டான்.
அதை பார்த்த கண்ணாயிரம் ஆத்துதண்ணீர் வேண்டாம் என்பது போல் கையை அசைத்தார். அதை பார்த்த கோடாங்கி கோபத்தில் என்னைய்யா வேணும் என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம் தேங்கா தண்ணீ என்று மெல்லிய குரலில் கூறினார். வாயை வேறு பெரிதாக பிளந்தார். கோடாங்கி அதை பார்த்தார். தேங்கா தண்ணீ கொடுக்கலன்னா விடமாட்டார் என்று நினைத்தார்.
உடனே ஒருதேங்காயை அரிவாளால் ஓங்கி வெட்டி உடைத்தார். பின்னர் தேங்காயை பிளந்து கண்ணாயிரம் வாயில் ஊற்றினார். அவர் மடக், மடக் என்று குடித்தார். அவர் முகத்தில் சிந்திய துளிகளையும் நாக்கால் தடவி ருசித்தார். பின்னர் மெல்ல எழுந்து உட்கார்ந்தார்.
மோட்டார் சைக்கிள் வாலிபரை பார்த்து உன்னை பேய்பாடலை படிக்காத என்று சொன்னேன்.. நீ கேட்கவில்லை. அதனால நான் பயத்தில் கீழே விழுந்துவிட்டேன். படாத இடத்தில் பட்டுச்சுன்னா என்ன ஆயிருக்கும்.யோசிச்சுப்பார் என்றார் கண்ணாயிரம்.
அதற்கு அந்த வாலிபர் இனி பாடமாட்டேன் என்று சொன்னார். அடுத்து பவுர்ணமி பூஜைக்கு ரெடியாகிட்டீங்களா என்று கோடாங்கி சத்தம் போட்டார்.
கண்ணாயிரம் கோடாங்கி முன் வந்து நின்றார். உட்காருமய்யா என்று கோடாங்கி அதட்டினார். கண்ணாயிரம் அமர்ந்தார். பனிகொட்டியது. கண்ணாயிரம் கருப்பு போர்வையை உடல் முழுவதும் போர்த்திகொண்டார். முகம் மட்டும் வெளியே தெரிந்தது. கண்ணாயிரம் முன் வாழை இலைய வைத்தார். அதில் வாழைப்பழம் மல்லிகை பூ இருந்தது. பின்னர் பொங்கல் பானையிலிருந்து பொங்கல் எடுத்துவைத்தார். உடைத்த தேங்காயை வைத்தார். பின்னர் உடைக்காத தேங்காயை கழுவுவதற்காக ஆற்றுக்குள் இறங்கினார்
.
அப்போது கண்ணாயிரம் மோட்டார், சைக்கிள் வாலிபரிடம் தம்பி இங்கே வா அர்ஜெண்டா “நம்பர் ஒண்” போகணும். நீகறுப்புகம்பளியை நல்லா மூடிக்கிட்டு இரு. கோடாங்கிக்கு முகத்தை காட்டாதே அடித்துக் கேட்டாலும்பதில் செல்லாது என்றார். பின்னர் கறுப்பு கம்புளியை மாட்டிக்கிட்டு கண்ணாயிரம் காட்டுபகுதிக்குள் ஒதுங்கினார்.
அந்த நேரத்தில் கண்ணாயிரம் இருந்த இடத்தில் மோட்டார் சைக்கிள் வாலிபர் அமர்ந்திருந்தார். அவர் கறுப்பு கம்பிளியால் தலை முதல் உடல்வரை நன்றாக மூடி இருந்தார். ஆற்றுக்குள் இறங்கி தேங்காயை கோடாங்கி கழுவினார். பின்னர் மேலே பூசைபொருள்கள் உள்ள பகுதிக்கு கோடாங்கி வந்தார். கழுவிய தேங்காயை கண்ணாயிரம் இருப்பதாக நினைத்து மோட்டார் சைக்கிள் வாலிபரின் தலையை சுற்றினார். பின்னர் அரிவாளால் தேங்காயை உடைத்து தண்ணீரை மோகினி உள்ளதாக கருதப்படும் செம்பில் ஊற்றினார். பின்னர் வெற்றிலையில் சூடத்தை ஏற்றிவைத்தார். திடீரென்று அருள் வந்தவர் போல் கற்ஜித்தார். அதை கேட்டதும் கண்ணாயிரம் பதுங்கிக்கொண்டார். பின்னர் கோடாங்கி தனது பையிலிருந்து சாட்டையை எடுத்தார். மோட்டார் சைக்கிள் வாலிபரின் தலையை சுற்றினார். இதையடுத்து மோகினி போய் விடு என்று சாட்டையால் அடித்தார். மோகினி போயிடுவியா இல்லையா பதில் சொல் என்று மீண்டும் சாட்டையால் அடித்தார்.
பேசக்கூடாது என்று கண்ணாயிரம் கூறியதால் மோட்டார் சைக்கிள் வாலிபர் பேசாமல் இருந்தார். கோடாங்கி கோபத்துடன் மீண்டும் சவுக்கால் அடித்தார். மோகினி போயிட்டியா இல்லையா என்று கனத்த குரலில் கேட்டார் சவுக்கால் அடித்தார். .வாலிபருக்கு வலிதாங்கமுடியவில்லை. வேறு வழி இல்லாமல் ம்… என்றார்.
உடனே கோடாங்கி மகிழ்ச்சியுடன் அடி கொடுத்தாதான் கதை நடக்குது என்று கூறினார். பின்னர் கண்ணாயிரம் என்று நினைத்து வாலிபரின் இடுப்பில் தாயத்தை கட்டினார். தேங்கா தண்ணீர் நிரம்பிய மோகினி இருப்பதாக கூறப்படும் செம்பு தண்ணீரை எடுத்து கொண்டு ஆற்றுக்குள் இறங்கினார். மோகினியேபோ என்று செம்புதண்ணீரை ஆற்றுதண்ணீரில் கலந்தார். நீராடினார்.
இந்த நேரத்தில் கண்ணாயிரம் முள்புதர்மறைவுக்குள்ளிருந்து வெளியே வந்தார். மோட்டார் சைக்கிள் வாலிபரை ஆற்றுக்குள் இறங்கிகுளிக்க சொல்லிவிட்டு கண்ணாயிரம் அந்த இடத்தில் மீண்டும் அமர்ந்தார். சவுக்கடியிலிருந்து நல்லவேளை தப்பிவிட்டோம் என்று புன்னகைத்தார்.

  • வே. தபசுக்குமார். புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.