அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு எமிரேட்சில் தஞ்சம்
1 min read
President Ashraf Ghani seeks asylum in the United Arab Emirates
18.8.2021
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான் பயஙகரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலை அவர்கள் நெருங்கிய நிலையில், தன் குடும்பத்தாருடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் எங்கிருக்கிறார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. இநfநிலையில் சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்கவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளேன்’ என, கனி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, ‘அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மனிதநேய அடிப்படையில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என, ஐக்கிய அரபு எமிரேட்சின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.