June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

1 min read

3 terrorists shot dead in Kashmir

24.8.2021

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

பயங்கரவாதிகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது. இதுபற்றி காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், சோப்பூரில் என்கவுண்ட்டர் தொடங்கியுள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேடுதல் வேட்டை நிறைவடைந்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *