இந்தியர்களை மீட்கும் பணிக்கு ‘ஆபரேஷன் தேவி சக்தி’ என பெயர்
1 min read
The task of rescuing the Indians is called ‘Operation Devi Shakti’
14.8.2021
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் தேவி சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.
மீட்பு பணி
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து இருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானிய மக்களையும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இருந்து 250-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஆப்கானியர்கள் பலரும் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறிப்பாக, இன்றும் காபூலில் இருந்து மீட்கப்பட்ட 25 இந்தியர்கள் உள்பட 78 பேர் தஜிகிஸ்தானில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தேவி சக்தி
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிக்கு ’ஆபரேஷன் தேவி சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’ஆபரேஷன் தேவி சக்தி’ தொடர்ந்து செயல்படுகிறது. காபூலில் இருந்து மீட்கப்பட்ட 78 பேர் தஜிகிஸ்தானின் துஷன்பி நகரில் இருந்து இந்தியா வந்தடைந்தனர். இந்திய விமானப்படை, ஏர் இந்தியா மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளின் சோர்வடையாத முயற்சிக்கு வணக்கம்’ என பதிவிட்டுள்ளார்.