பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம்
1 min readMariyappan won silvar in para Olimpic
31.8.2021
டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் 8-வது நாளான இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
உயரம் தாண்டுதலில் வெண்கலபதக்கத்தை பீகாரை சேர்ந்த சரத்குமார் வென்றார்.உயரம் தாண்டுதல் பிரிவில் அமெரிக்க வீரர் கிரீவ் சாம் தங்கம் வென்றார்.