தமிழகத்தில் இன்று 1,544 பேருக்கு கொரோனா; 19 பேர் சாவு
1 min read
Corona for 1,544 people in Tamil Nadu today; 19 deaths
7.9.2021
தமிழகத்தில் இன்று புதிதாக 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,25,778 ஆக உயர்ந்துள்ளது.
19 பேர் சாவு
இன்று மேலும் 19 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 3 பேரும், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் தலா 2 பேரும், கடலூர், சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
இததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,055 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் ஒரே நாளில் 1,576 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,74,518 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 16,205 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,55,210 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-
கோவை – 217, சென்னை – 194, ஈரோடு – 115, செங்கல்பட்டு – 112, திருப்பூர் – 70
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இன்று 11 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 9 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.