உடல் எடையை குறைத்தது எப்படி?; – குஷ்பு
1 min read30/9/2021
உடல் எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு
90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததைப் போல தற்போது அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு.
கடந்த சில மாதங்களாகவே உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. தற்போது அதன் பலனாக, இன்றைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
இதையடுத்து ‘உடல் எடையை எப்படி குறைத்தீர்கள்’ என ரசிகர்கள் பலரும் அவரிடத்தில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் குஷ்பு.
அதன்படி, நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் வேகமாக குறைந்துவிடும் என குஷ்பு கூறியுள்ளார்.