ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி; பிரதமர் மோடி பேச்சு
1 min read
A medical college in each district; Prime Minister Modi’s speech
7/10/2021
நாடு முழுவதும 35 பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சுகாதாரத் துறையை பாராட்டியதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதே அரசின் நோக்கம் என்றார்.
‘6-7 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சில மாநிலங்களில் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை இருந்தது. இன்று, எய்ம்ஸ் மருத்துவமனையை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. 22 எய்ம்ஸ் மருத்துவமனை என்ற வலுவான நெட்வொர்க்கை உருவாக்க வேகமாக பணியாற்றுகிறோம். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோளாகும்’ என்று பிரதமர் மோடி பேசினார்.