நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
1 min read
Nobel Prize in Literature for Novelist Abdul Razak Kourna
7.10.2021
அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக அப்துல்ரசாக் குர்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
21 வயதில் இருந்து…
நோபல் பரிசு பெற்ற அப்துல் ரசாக் குர்னா தான்சானியா நாட்டை சேர்ந்தவர். இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 21 வயதில் இருந்து பல நாவல்களை எழுதியுள்ள அப்துல் ரசாக்கிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் வாழ்வியல் பற்றிய நாவலுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.