கண்ணாயிரம் என் கணவர்-தேடி வந்தப் பெண்/ நகைச்சுவைசிறுகதை
1 min read
Kannayiram en Kanavar/ story by Thabasukumar
6/10/2021
கண்ணாயிரம் காலை வேளையில் வாக்கிங்சென்றார். அவரை ஏற்கனவே கடித்த நாயுடன் துபாய்காரர் வாக்கிங் சென்றதால் கண்ணாயிரம் பயந்துபோய் ஒருமரத்தின் அடியில்ஒதுங்கிநின்றார். அதே நேரத்தில் கண்ணாயிரம் வாக்கிங் சென்றுவிட்டு ஏழரை மணிக்குள்வந்துவிடுவார் என்றுநினைத்து அவரது மனைவி இட்லி அவிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அந்த நேரத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்டது. கண்ணாயிரம் மனைவி தன் கணவர்தான் வந்துவிட்டார் என்று நினைத்து கோபத்தில் வாக்கிங் போயிட்டு ஏழரை மணிக்குள் வரச் சொன்னா உடனே வந்துட்டாரே.. இரண்டு திட்டுதிட்டுனாத்தான் சரிவருவார் என்று கதவை வேகமாக திறந்தார்.
அங்கு ஒருபெண்தனதுநான்கு வயதுமகனுடன் நின்றுகொண்டிருந்தாள்.
யார் நீங்க என்ன வேணும் என்று கண்ணாயிரம் மனைவி கேட்டார்.
அதற்கு அந்தபெண் இது கண்ணாயிரம் வீடுதானே. அவர்தான் வேணும் என்றார்.
உடனே கண்ணாயிரம் மனைவி கோபத்தில் யார் நீங்க. அதைமுதலில்சொல்லுங்க என்றார்.
அதற்கு அந்தபெண் மெல்லியகுரலில் என் பெயர் கவுசல்யா. என் கணவர் பெயர் கண்ணாயிரம். என்று சொன்னார். இதைக்கேட்டதும் கண்ணாயிரம் மனைவி கோபத்துடன் என்ன சொல்லுற என்றார்.
அதற்கு அந்த பெண் நான் உண்மையைத்தான் சொல்லுறேன். என்மகன் கிட்டவேணு முன்னாகேட்டு பாருங்க என்றுசொன்னாள்.
உடனே கண்ணாயிரம் மனைவி அந்த சிறுவனிடம் டேய்தம்பி உன் அப்பா பெயர் என்று கேட்டார்.
அந்த சிறுவன் என் அப்பா பெயரா.. அதுவந்து கண்ணா.. ரம் என்றான். என்ன கண்ணரம்மா… என்ன சொல்லுறான் என்று கண்ணாயிரம் மனைவி சந்தேகத்தில் கேட்டார்.
அதற்கு அந்தபெண் வேகமாக என் பையன் எப்பவும் அவங்க அப்பாவை கண்ணாயிரத்துக்கு பதில் கண்ணாரம் அப்படின்னுதான் சொல்வான் என்றாள். கண்ணாயிரம் மனைவி ஆவேசமாக கத்தினார். அய்யோ இந்தபாவிமனுசன் இப்படி பண்ணிவைச்சிருக்காரே.. நான் என்ன பண்ணுவேன். யாருக்கிட்டசொல்வேன் என்று அழுதார்.
அவரது அழுகை சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் அங்கேஓடிவந்தார்கள். என்ன ஆச்சும்மா என்று கண்ணாயிரம் மனைவியிடம் கேட்டார்கள். அவர் நான் என்னத்தசொல்வேன் என்று கதறினார்.
சொல்லும்மா நாங்க உன்பிரச்சினையைதீர்த்துவைக்கிறோம் என்றார்கள்.
கண்ணாயிரம் மனைவி கண்ணீர் சிந்தியபடி இந்தபொண்ணு அவர் கணவர்பெயர்கண்ணாயிரமுன்னு சொல்லுது. இந்த பையனை கேட்டாலும் அப்பாபெயர் கண்ணாயிரமுன்னு சொல்லுறான். நான் என்ன பண்ணுவேன் என்றார்.
பெண்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்தமுதியவர் ஒருவர், ஏம்மா நீபூசனிக்காய் தடியா இருந்தா கண்ணாயிரம் என்ன பண்ணுவான். புடலங்காய் மாதிரி ஒல்லியா ஒண்ண புடிச்சுட்டாம் போலிருக்குது என்று சந்தேகத்தை கிளப்பினார்.
உடனே ஒரு பெண் மெதுவாக கட்டிய பொண்டாட்டிக்கு புள்ள இல்லங்கிறதுக்காக இப்படியா செய்யிறது என்று பிரச்சினையை பெரிதாக்கினார்.
கண்ணாயிரம் மனைவி ஒப்பாரிவைத்து அழதொடங்கினார். பெண்கள் அவரை அமைதிபடுத்தினர்.
கண்ணாயிரம் எங்கேபோயிருக்கார் என்றுகேட்டார்கள்.
அவர் வாக்கிங்போயிருக்கார் என்று மூக்கை சீந்தியபடி கண்ணாயிரம் மனைவி சொன்னார்.
உடனே ஒரு பெண், என்ன பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு வாக்கிங் வேறயா… வரட்டும்.. வரட்டும் என்று காத்திருந்தனர்.
இந்த நேரத்திலே வாக்கிங்சென்றுமரத்ரடியில் ஒதுங்கிநின்றார் கண்ணாயிரம் தொடர்ந்துவாக்கிங் போகலாமாவேண்டாமா. போனால் நாய்கடிக்குமா, கடிக்காதா என்று சிந்தனையில் அங்கே நின்றார். அப்போது துபாய்காரர் வாக்கிங் சென்றுவிட்டு நாயுடன் வேகமாக திரும்பிவந்துகொண்டிருந்தார். அதை பார்த்ததும் கண்ணாயிரம் மரத்தின் பின்னால் மறைந்து கொள்ளமுயன்றார். அதை பார்த்த துபாய்காரர்.. என்ன கண்ணாயிரம் பயப்படாதீங்க. நாய்கடிக்காது. உங்களபாத்து அதுபயப்படுது. வேகமாக வீட்டுக்குபோகணுமுன்னு இழுக்குது. நாங்க போறோம். ஏழரைமணிஆகப்போகுது. நீங்க பயப்படாமல் வாக்கிங் போங்க என்று கண்ணாயிரத்திடம் கூறினார்.
கண்ணாயிரம் மெல்ல சரி, சரி, மணி ஏழரைஆகப்போகுதா. இனி வாக்கிங் எங்கேபோவது வீட்டுக்குத்தான்போகவேண்டும் என்று வீட்டுக்குபுறப்பட்டார். நாயை கண்ட பயத்தில் ஏற்கனவே பனியன் தொப்பலாகநனைந்திருந்தது. சரி. இதைகாட்டியே மனைவியிடம் வாக்கிங் போயிட்டுவந்ததாக சமாளிக்கலாம் என்று நினைத்தபடி வீட்டைநோக்கி நடந்தார். அப்போது அடி என்னடி ராக்கம்மா பாடலைப்பாடியபடி வந்தார்.
-வே.தவசுகுமார், புதுச்சேரி