May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பத்திரகாளி அம்மன் அவதார நாள்

1 min read

Bhattirakali Amman Incarnation Day

11/10/2021
பத்திரகாளி அம்மன் பராசக்தியின் ஓர் அவதாரம். மகிஷாசூரனை வதம் செய்ய பராசக்தி, பத்திரகாளியாக வந்தாள்.

வரமுனி என்ற முனிவர் ஒரு சிவபக்தன். அவன் சிவனைத் தவிர மற்ற யாரையும் வணங்க மாட்டார். ஒருநாள் அகத்திய மாமுனிவரை மதிக்காமல் அகந்தையோடு இருந்ததால் அவரின் கோபத்துக்கு ஆளானார். இதனால் எருமைத் தலையுடன் கூடிய அரக்கனாக மாற சாபமிட்டார்.
அதன்படி மிகுந்த பலம்கொண்ட மகிஷாசூரனாக மாறினார். மகிஷம் என்றால் எருமை என்று பொருள். அதனால் அப்பெயர் வந்தது. மகிஷாசூரனை தமிழில் மகுடா சூரன் என்று அழைப்பார்கள்.
அவன் கடும் தவம் இருந்து எந்த ஒரு ஆணாலும் தன்னை அழிக்கமுடியாத வரத்தைப் பெற்றான். வரம் பெற்ற மகிஷா சூரன் மக்களையும் தேவர்களையும் கொடுமைப்படுத்தினார்.
இதனால் தேவர்கள் சிவபெருமான், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்கள் தங்களால் மகிஷாசூரனை வதம் செய்ய முடியாது என்றும், அவனை பராசக்தியால்தான் முடியும் என்றார்கள். பராசக்தியிடம் முறையிடவே அவள் பத்திரகாளியாக அவதாரம் எடுத்து மகிஷா சூரனை வதம் செய்ய முன்வந்தான். பத்திரகாளி அம்பை எய்ந்தவுடன் மகிஷாசூரன் உடலில் இருந்து கொட்டும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் ஒரு மகிஷா சூரன் உற்பத்தியானான். இதனால் பத்திரகாளி சண்டியை வரவழைத்து மகிஷாசூரனின் உடலில் இருந்து கொட்டும் ரத்தத்தை உறிஞ்சிவிடும்படி கூற, அதன்பின் மகிஷாசூரன் மாண்டான்.
அதாவது நவராத்திரி நாட்களில் அஷ்டமி என்று நடு இரவில் உள்ளதோ அந்த நாளில்தான் பத்திரிகாளி அவதாரம் எடுத்தாள். அந்த வகையில் இந்த ஆண்டு 13.10.2021 புதன்கிழமை வருகிறது. அன்று சண்டி ஹோமம் செய்ய உகந்த நாள். தேவி பாகவதனம் படிக்கலாம். இதனால் போட்டிகளில் வெற்றியை காணலாம் . எதிரிகளின் சதியை முறியடித்து வெற்றி காணலாம்.

மகிஷா சூரனை அழிக்க அவதரித்த பத்திரகாளி..பின்னர் சப்த கன்னியர்கள் மூலம் பிறந்த ஏழுக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றாள். இதில் 2 பேர் மன்னனின் கொடுங்கோலுக்கு பலியானார்கள். மற்ற 5 பேரும் வளர்ந்து வம்சத்தை பெருக்கிறர்கள். அவர்கள்தான் நாடார் என்று அந்த இன வரலாறு கூறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.