கட்டெறுப்பே உஷார்
1 min readAntler alert/ Puthu kavithai by Kavi arasan
கடையம் கவியரசன் என்ற அந்தோணிராஜ் எழுதிய புதுக்கவிதை
மீசை
இளைமையில் என் கருமீசையில்
அனைத்தும் கறுப்பு முடிகள்
வெள்ளை நிற நரைமுடி ஒருசில
கத்தரியை கையில் எடுத்து
தேடித்தேடி வெட்டினேன்
முதுமையில் அதே மீசையில்
அனைத்தும் வெள்ளைமுடிகள்
தேடினேன்.. தேடித் தேடி வெட்டினேன்
ஒருசில கறுப்பு முடிகளை.. காலம் மாறிவிட்டது
கட்டெறும்பே உஷார்..
கட்டெறுப்பே.. உஷார்!
காலையில் எழுந்து
கால்வாயில் குளிக்க,
நானும் மனையும்
பைக்கில் சென்றோம்
அழுக்குத் துணிகளை
ஆறேழு நாளாய் சேர்த்து
இரண்டு பையில்
கொண்டுபோய் துவைத்தோம்
குடிக்க டீயும்..
சூடாய் போண்டாவும்
வாங்கிச் சென்று
கால்வாய் மடையி்ல்
கால்கடுக்க நின்று
துவைத்தாள்
நெடுமரமாய்
வளர்ந்த நான்
வாகை மரத்தின்
வால் போன்ற வேரில்
படுத்துக் கொண்டேன்
பறக்கும் ஈசலை பிடிக்க
காகம் பறந்து பறந்து
வட்டமிட்டதை
பார்த்து ரசித்தேன்.
துவைத்த கையோடு குறித்தோம்
பல்லோடு பல் ஆடியது
என் மனைவிக்கு குளிரில்
எனக்கோ.. ஊனோடு ஊன் ஆடியது
பல் இல்லை என்பதால்
சூடான டீயை
கடைக்காரன் தந்த கப்பில் குடித்தோம்
எனக்கு சுகர் என்பதால்
சீனியை தனியாக
வாங்கி வந்தேன், மனைவிக்காக…
மீதம் இருந்த சீனியை
தாளில் மடித்தேன்
என் மனைவியோ
மரத்தடியில் சீனியை
வரித்து வைக்கச் சொன்னாள்
இங்கும் அங்கும்
இரைதேடி ஓடும்
எறுப்புக்கு இறையாகும் என்றாள்
மறுவார்த்தை சொல்லவில்லை
மனைவி சொல் மந்திரமானது
ஆனால்.. என் மனதில்
ஓர் பயம்..
சீனியை தீனியாய் உண்ட
எறுப்புக்கு சுகர் வந்துவிடுமே என்று
ஊசிப்போட கூட உன் உடம்பி்ல்
இடமில்லையே…