அவதாரங்கள்(Kannambi Rathinam)
1 min readAvathrangal by kannambi Rathinam
சிவ சிவ சிவா அரகரா ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம்
சிவ சிவ சிவா அரகரா ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம்
வேள்வி ஒன்று வளர்த்திருந்தார்
மூலப்பொருள் சிவபெருமான்
வேள்வியிலே குறோணி என்ற
கொடிய அசுரன் தோன்றி வந்தான் (சிவ சிவா)
பூமியெல்லாம் நடுநடுங்கும்
பேருருவம் கொண்டவனவன்
கயிலை மலையைக் கனியென்று
கையிலெடுத்து விழுங்க நின்றான் (சிவ சிவா)
பசியாலே அலறி நின்றான்
பாரதிர குறோணியவன்
சிவபெருமான் கயிலைதனை
விழுங்கிடவே துணிந்து நின்றான் (சிவ சிவா)
ஆறு துண்டமாய் நாராயணம்
குறோணியை வெட்டி வீழ்த்திவிட்டார்
ஆறுபீடங்கள் அமைத்துவிட்டார்
நீடிய யுகத்தில் தேவர்களெல்லாம் (சிவ சிவா)
ஒவ்வொரு துண்டமும் ஒவ்வொரு பிறவி
ஆகிவந்தான் குறோணியவன்
ஆறு துண்டமும் ஆறு பிறவி
ஆகிவிட்டான் அசுரனவன் (சிவ சிவா)
ஆறு யுகமும் நாராயணம்
அவதரித்தார் பூமியிலே
வரங்கள் பெற்று வந்தவனை
வதைத்துவிட்டார் யுகங்களிலே (சிவ சிவா)
சதுர்யுகத்தில் குண்டோமசாலி
பிறந்திருந்தான் பேருருவாய்
தவலோகம் அலையும் வண்ணம்
அலறி நின்றான் ஆங்காரமாய் (சிவ சிவா)
தூண்டில் போட்டுக் குண்டோமசாலியை
கொன்று முடித்தார் நாராயணம்
துயரமில்லா வாழ்வுதனை
அருளிச் செய்தார் நாராயணம் (சிவ சிவா)
நெடுயுகத்தில் தில்லை மல்லாலன்
மல்லோசி வாகனன் ஆணவத்தால்
தவமிருந்த சுருதி முனியைக்
காலால் இடறிக் கடலில் வீசினார் (சிவ சிவா)
சாபம் கூறிக் கடலினிலே
கணையாக வளர்ந்திருந்தார்
கணையைத் தொடுத்து அரக்கர்களின்
கதையை முடித்தார் நாராயணம் (சிவ சிவா)
கிரேதாயுகத்தில் சூரபத்மன்
சிங்க முகனாய்ப் பிறந்திருந்தார்
இருவராகப் பிறந்து வந்து
வரங்கள் பெற்றார் வம்பு செய்தார் (சிவ சிவா)