தலைவா வருகவே.. காமராஜர் புகழ்பாடல்/ தபசுகுமார்
1 min read“Thaliva Varugave..” Praise song of Kamaraj/ Tabasukumar
15.7.2024
தலைவா..வருகவே.!
எங்கள் தமிழகம் தலைநிமிர
தலைவா வருகவே!
விருதுநகரில் பூத்த ரோஜாவே!
விருதுகளுக்கு பெருமை சேர்த்த ராஜாவே..
எளிமையில் ஏற்றம் கண்டவரே
ஏழைகளின் வாழ்வு முன்னேற உறுதி கொண்டவரே
கல்வி பயிர்செழிக்க வித்திட்டவரே
கண்ணான மாணவர்கள்
கனவுகள் நினைவாக செய்திட்டவரே..
தலைவா வருகவே.
எங்கள் தமிழகம் தலைநிமிர
தலைவா வருகவே!
ஊர்தோறும் கல்வி சாலை தந்தாய்
உண்பதற்கு மதிய உணவு தந்தாய்
உழைப்பவர் முன்னேற ஆலைகள் தந்தாய்
உழவர்கள் மகிழ்ச்சி பொங்க
அணைகள் தந்தாய்..
தலைவா வருகவே..
தமிழகம் தலைநிமிர
தலைவா வருகவே!
தியாகத்தில் தீபமாய் நீ
இருந்தாய்..
திட்டங்கள் தீட்டி மக்கள்
வாழ்வில் ஒளி தந்தாய்
தலைவா வருகவே..!
ஆட்சி கட்டிலை அலங்கரித்தாய்..
ஆண்டபின்னும் மக்கள்
நெஞ்சில் என்றும் குடியிருந்தாய்!
பொதுநலமே உம் நலமய்யா..அதுவே
உம் பலமய்யா..
வளர்பிறையாய் வளருது
உம் புகழய்யா..
உம் வருகைக்காக தமிழகம் ஏங்குதய்யா..
தலைவா வருகவே..
தமிழகம் தலைநிமிர
தலைவா..வருகவே..
தமிழகம் தலைநிமிர
தலைவா வருகவே..
- வே.தபசுக்குமார்.