நடிகர் ரஜினிகாந்த்துக்கு அறுவை சிகிச்சை; ஒரு சில நாட்களில் டிஸ்சார்ஜ்
1 min readrgery for actor Rajinikanth; Discharge in a few days
29.10.2021
நடிகர் ரஜினிகாந்த்துக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இன்னும் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர்.
தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள சாதாரண அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறுவை சிகிச்சை
இது தொடர்பாக ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்திற்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரஜினிகாந்த் இன்னும் ஓரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.