May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை சிக்க வைத்த கல்யாண பத்திரிகை / நகைச்சுவை கதை

1 min read

Kannayiram’s weding invitetion / Story by Thabasukumar

1.11.2021
கண்ணாயிரம் தன்னை தேடிவந்த கவுசல்யா தன்மனைவி இல்லை என்று கூறினாலும் அவளுக்கு மகன் பிறக்க தான்தான்காரணம் என்று கூறியதால் அருவா அமாசை தலைமையில் பஞ்சாயத்து நடந்தது. அவர் கோபத்தை அடக்கிக்கொண்டு பணிவாக கேட்டபோது கண்ணாயிரம் மெதுவாக குழந்தை பிறப்பு ரகசியத்தைபோட்டுடைத்தார். குழந்தை இல்லாத தனது நண்பன் முருகன் போல் குழந்தை பிறக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது முருகன்கோவிலுக்குபோ. முருகன்போல்குழந்தைபிறக்கும் என்று சொன்னதாகவும் அதுபோலமுருகன் கோவிலுக்குபோன நண்பனுக்கு ஆண்குழந்தை பிறந்ததாகவும் அதனால் அந்த குழந்தை பிறக்க தான்தான் காரணம் என்றுசொல்வதாக கண்ணாயிரம் தெரிவித்தார். ஆனால் ஊர்மக்கள் அதை நம்பவில்லை. கண்ணாயிரம் கதை விடுகிறார். எதையோமறைக்கிறார் என்றே நினைத்தனர்.
அப்போது முதியவர் ஒருவர் சற்றுயோசித்தபடி, கண்ணாயிரம், நீ சொல்லுறது., சரிதான். கதை நல்லாதான் இருக்கு, ஆனா நம்புறமாதிரி இல்லையே, இந்த சின்னபையன் பேரு என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே, இதுபெரிய விசயமா. இந்த சின்னபையன் பேரு சுரேஷ் என்று சொல்லி சிரித்தார். அதை கேட்டதும் முதியவர் சற்றுகோபமாக ஏம்பா, முருகன் கோவிலுக்குபோனதால் இந்த சிறுவன்பிறந்தான்னு சொன்னால்ல, அப்படின்னா இந்த சிறுவனுக்கு முருகன்னுல்லா பெயர்வைச்சிருக்கணும் என்று கேட்டார். கண்ணாயிரம் உடனே இந்த சிறுவனுக்கு இரண்டு பேரு. அது என்ன தெரியுமா . முருகன் என்ற சுரேஷ். என்று கூறியவாறு முதியவரை பார்த்தார். அவர் அந்த பதிலில் திருப்தி அடையாமல் சுரேஷ் என்கிற பேரு எப்படிவந்துச்சு அதை சொல்லு என்றார். கண்ணாயிரம் கோபத்தில் பஞ்சாயத்து தலைவரு அருவா அமாவாசையா, நீங்களா. கேள்வி மேல் கேள்வி கேட்கிறீங்க. பஞ்சாயத்து தலைவர் கேட்டாதான் பதில் சொல்வேன் என்று பிடிவாதம் பிடித்தார். அதற்கு முதியவர், கோபப்படாதே கண்ணாயிரம், நீ குழப்புற குழப்பத்துல பஞ்சாயத்து தலைவரே குழம்பிப் போய் இருக்காரு. அதனால்தான் நான் கேட்டேன். இனி அவரை நான் கேட்கசொல்லுறன் என்றார்.
அருவா அமாவாசை விழித்துகொண்டு, ஆ.. ஆளாளுக்கு கேள்வி கேட்காதீங்க.நானே கேட்கிறேன். கண்ணாயிரம் அந்த சிறுவனுக்கு சுரேசு ன்னு பெயர்வந்தது எப்படி சொல்லு. நான் உன்னைவிடுவதாக இல்லை என்றார். கண்ணாயிரம், அப்படிவாங்க வழிக்கு, என் நண்பனின் அப்பா பெயரை வச்சிருக்காங்க இப்ப புரியுதா என்று கேட்டார். உடனே அருவாஅமாவாசை கோபத்தில், தாத்தா பெயருங்க, ஆனா புதுசா இருக்கே. இந்த பெயரு இருக்காது என்று சொன்னார்.
அதற்கு கண்ணாயிரம், நீங்க நினைக்கிறது சரிதான். அந்த பையனின் தாத்தா பெயர் சொயம்பு. அதில் முதல் எழுத்தை எடுத்துக்காட்டாங்க. என்று சொன்னார். உடனே அருவா அமாவாசை, மெல்ல சொயம்புன்னா எப்படி முதல் எழுத்து சு வரும் என்று கேட்டார். அதுவா கூப்புடுறது சொயம்பு, எழுதுவது சுயம்பு. அதுல முதல் எழுத்த எடுத்துக்கிட்டாங்க.. போதுமா என்ற கண்ணாயிரம் தன் தன் வலது கை ஆள்காட்டிவிரலாலும் பெருவிரலாலும் மூக்கை அழுத்தி எடுத்தார். அப்போது அங்கு நின்ற சிறுவனும் கண்ணாயிரம் செய்ததுபோல் தன்விரல்களால்அழுத்தி எடுத்தான். அதை எல்லோரும் பார்த்தனர்
.
இதைபாருய்யா.. கண்ணாயிரம் செய்யுறமாதிரி செய்யுறான்.விசியம் இல்லாமலா இருக்கும் என்று ஒருவரையொருவர்பார்த்து முணுமுணுத்தனர். அருவா அமாவாசைக்கு அது புரிந்தது. ஏய் கண்ணாயிரம், நீ மூக்கைபிடிக்கிறமாதிரி சிறுவனும் மூக்கைபிடிக்கிறான். என்ன சமாச்சாரம் என்று அதட்டியபடி கேட்டார். கண்ணாயிரம் உடனே, எனக்கு ஜலதோஷம் அதனால மூக்கைபிடிச்சேன் அதைபார்த்து அவனும் மூக்கைபிடிக்கிறான். நீங்க நாக்கை நீட்டுங்க அவனும் நாக்கை நீட்டுவான் என்று அருவா அமாவாசையைபார்த்து சொன்னார்.
அப்படியா என்று அருவாஅமாவாசை நாக்கை நீட்டினார். உடனே பதிலுக்கு அந்த சிறுவனும் நாக்கை நீட்டினான். பாத்தியளா. நான்சொன்னமாதிரி செய்யுறானா. நீங்க நாக்கை கடிங்க அவனும் நாக்கை கடிப்பான் என்று கண்ணாயிரம் சொல்ல, அருவாஅமாவாசை நாக்கைகடித்தார். சிறுவனும் பதிலுக்கு நாக்கை கடிக்க அங்கிருந்தவர்கள் ஆமா இந்தபய பொல்லாத பய என்றனர். அப்போது கண்ணாயிரம் அப்ப இந்த சுரேசை எம் பூங்கொடிக்கு தம்பின்னு சொல்லுவீங்களா என்று முணுமுணுத்தார்.
அப்போது முதியவர்… ஆமா, கண்ணாயிரம் நீ செருப்புபோடுறதில்ல. அதுபோல அந்த சிறுவனும் செருப்பு போடுறதில்லையா என்று மெல்ல கேட்டார். அருவா அமாவாசை உடனே இருவரது கால்களையும்பார்த்துவிட்டு, ஆமா. கண்ணாயிரம் இதுக்கு என்ன பதில் சொல்லுற என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம், அடிக்கடி செருப்பு தொலைஞ்சு போகுது. அதனால செருப்பு போடுறதில்லை.
சுரேசு ஏன் செருப்பு போடுறதில்லைன்னு அவனிடம்தான் கேட்கணும் என்று சொன்னார். இதையடுத்து, ஏய் தம்பி நீ ஏன் செருப்பு போடுறதில்லை. சொல்லு என்று அருவாஅமாவாசை கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன் வரும்போது இரண்டுசெருப்பும் அறுந்துபோச்சு. தூக்கிவீசிட்டுவந்துட்டேன். போகும்போது புதுசெருப்புவாங்கணும் என்றான்.
அருவாஅமாவாசை அப்படியா, நான் எதையோஎதிர்பார்த்தேன். ஒண்ணும்பிரச்சனை இல்ல.ப்பா என்றார்.
பொதுமக்களைபார்த்து, சரி, இந்த சிறுவன் மேலுள்ள சந்தேகம் எல்லாருக்கும் தீர்ந்திடுச்சா என்று கேட்டார். எல்லோரும் அந்த சந்தேகம் தீர்ந்திடுச்சு என்றனர்.
அப்போது சைக்கிள் வாலிபர், திடீரென்று எனக்கு சந்தேகம் தீரலை. ஒருசந்தேகம் இருக்கு என்றான். அருவாஅமாவாசை, என்னப்பா உன் சந்தேகம், சொல்லு. கண்ணாயிரம் பதில் சொல்வான் என்றுகூறினார்.
உடனே அந்த வாலிபர், கண்ணாயிரத்தை நோக்கி, கவுசல்யா யார் என்று கேட்டார். கண்ணாயிரம் உடனே அது என் நண்பனின் மனைவி. இது போதுமா என்றார். அதற்கு அந்த வாலிபர் ஆவேசமாக இல்லை. கவுசல்யா உங்க மனைவிதான். நீங்க பொய்சொல்லுறீங்க. என்றான்.
அருவா அமாவாசை அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு என்று அந்த வாலிபரிடம் கேட்டார் அதட்டலாக.
அதற்கு அவன், ஆதாரம் இல்லாம பேசல. கண்ணாயிரத்துக்கும் கவுசல்யாவுக்கும் திருமணம் நடந்தற்கு அச்சடிக்கப்பட்ட கலியாணகார்டு என்னிடம் இருக்கு. காட்டட்டுமா என்று கேட்க மக்கள் ஆ என்று வாயைபிளந்தனர். (தொடரும்)
வே.தபசுகுமார். புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.