May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை சிக்கவைத்த போட்டோ/ சிறுகதை

1 min read

Kannayiram photo/ Story by Thabasukumar

3/11/2021
கண்ணாயிரத்தை தேடி வந்த கவுசல்யா மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோரால் ஏற்பட்ட குழப்பம் குறித்து அருவா அமாசைதலைமையில் பஞ்சாயத்து நடந்தது. சிறுவன் சுரேஷ் தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு கண்ணாயிரம் பதில் அளித்தார்.
சிறுவன் சுரேஷ் தனது நண்பனின் மகன் என்றும் கவுசல்யா தனது நண்பனின் மனைவி என்றும் கண்ணாயிரம் விளக்கம் அளித்தார். ஆனால் மோட்டார்சைக்கிள்வாலிபர் திடீரென்று எனக்கு ஒருசந்தேகம் என்று கூறியதுடன் கண்ணாயிரத்துக்கும் கவுசல்யாவுக்கும் திருமணம் நடந்தது. அதற்கான திருமண அழைப்பிதழ் என்னிடம் இருக்கிறது. கவுசல்யா தன்மனைவி இல்லை என்று கண்ணாயிரம் பொய்சொல்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
உடனே அருவாஅமாவாசை கோபத்தில் பஞ்சாயத்துமுடியபோகும்போது குழப்புறயா. என்று கேட்டார். மோட்டார் சைக்கிள் வாலிபர், நான் குழப்பலை.உண்மையைதான் சொல்கிறேன். கல்யாண கார்டில மணமகன் கண்ணாயிரம், மணமகள் கவுசல்யா ன்னு போட்டிருக்கு. நான் பார்த்தேன். என்று சொன்னார்.
அருவா அமாவாசை உடனே அந்த கலியாணகார்டை குடு என்றார். மோட்டார் சைக்கிள் வாலிபர் கலியான கார்டின் ஜெராக்ஸ் காபியை காட்டினான். அருவா அமாவாசை அதைவாங்கிபார்த்தார். கலியானகார்டின்முன்பகுதி மட்டும் இருந்தது. அதில் திருமண அழைப்பிதழ், மணமகன் கண்ணாயிரம், மணமகள் கவுசல்யா. இடம். விழுப்புரம். வானவில் திருமண மண்டபம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. . அருவா அமாவாசை அதிர்ச்சிஅடைந்ததுடன் திருமண தேதியை, வருடத்தைபார்த்தார். கவுசல்யாவுக்கும் கண்ணாயிரத்துக்கும் இருபது வருடத்துக்கு முன்பு ஜனவரி பத்தாம் தேதி திருமணம் நடந்திருக்கு. என் மகள் பூங்கொடிக்கும் கண்ணாயிரத்துக்கும் இருபது வருடத்துக்கு முன்ஜனவரி முப்பதாம்தேதி பூங்கொடியை எப்படி திருமணம் பண்ணினான். கண்ணாயிரத்துக்கு அவ்வளவு கிரிமினல் மூளை கிடையாதே. இது எங்கேயோ உதைக்குதே என்று நினைத்தவர், கண்ணாயிரத்தை பார்த்து ஏய், கவுசல்யா கல்யாணத்துக்கு போனியா என்று கேட்டார். கண்ணாயிரம் உடனே, ஆமா போனேன்,நான் இல்லாம எப்படி கலியாணம் நடக்கும். இரண்டு நாளா நான் அங்கேதான் இருந்தேன். வடைபாயாசம், சாப்பாடு பிரமாதம். நான் புது வேட்டி, சட்டை போட்டு பிரமாதமாக இருந்தேன். எல்லோரும் என்னை புதுமாப்பிளைன்னு சொன்னாங்க என்று சொல்லி வெட்கப்பட்டார். சிறிதுநேரம்கழித்து, கல்யாணத்துல செம கூட்டம். நான்மணமேடையைவிட்டு இறங்க முடியலை. ஒரே புழுக்கம். கலர் சோடாகுடுத்தாங்க குடிச்சேன். என்று அன்று நடந்ததை சுவைபட கூறினார். அருவா அமாசை தலையை சொரிந்தபடி, இவன் புரிஞ்சுதான்பேசுறானா. இல்லை புரியாம பேசுறானா என்றுவிழித்தார்.பின்னர் மெதுவாக கண்ணாயிரம், மணமேடையில் நீ இருந்தே சரி, கவுசல்யாவுக்கு யார்தாலிகட்டினா. என்று கேட்டார். உடனே கண்ணாயிரம் கோபத்தில் இது என்ன பைத்தியகாரத்தனமா இருக்கு. மாப்பிளை கட்டாம வேறுயாருகட்டுவா என்றார். அருவாஅமாவாசை கோபத்தில் நீகட்டினியா. சொல்லு என்று பற்களை கடித்தார். கண்ணாயிரம் உடனே என்னங்க மாப்பிள்ளைதான் தாலிகட்டினார். போதுமா என்று சிரித்தார். சரி. நீகட்டலைன்னு சொல்லுறீயா. அப்போ தாலிகட்டுனது யாரு என்று அருவாஅமாவாசை மடக்கி கேட்டார். கண்ணாயிரம் கோபத்துடன், மாப்பிளை தாலிகட்டினார். மாத்திமாத்திகேட்காதீங்கோ என்றார்.

அருவாஅமாவாசை விடவில்லை. கண்ணாயிரம், மாப்பிளைதாலிகட்டினாருன்னிசொன்னியே, மாப்பிளைபேரு என்ன என்று கேட்டார். கண்ணாயிரம், மெல்ல. இதுதேவைஇல்லாத கேள்வி. கலியாணகார்டிலே போட்டு இருக்கே. நீங்கதான்படிச்சிங்களே. மறுபடியும் ஏன் கேட்கிறீங்க. என்றார். அருவாஅமாவாசை பொறுமையாக, கலியாணகார்டிலே மாப்பிளைபேரு கண்ணாயிரமுன்னு போட்டிருக்கே. மாப்பிளைபேரு அதுதானா என்று கேட்டார். கண்ணாயிரம் முகத்தை சுழித்தபடி மாப்பிளைபேரை தப்பாவாபோடுவாங்க. கண்ணாயிரம் தான் மாப்பிளை பேரு என்றார். அருவாஅமாவாசை ஆத்திரத்தில் ஏய், அரிவாளை எடுக்ககூடாதுன்னு பார்க்கிறேன். ஒழுங்கா சொல்லு. உன்நண்பனுக்கு மனைவி கவுசல்யா ன்னு சொன்னீயா. இல்லையா. இப்போ கண்ணாயிரத்தின் மனைவின்னு சொல்லுறீய ஒரே குழப்பமாக இருக்கே என்றார். கண்ணாயிரம் உடனே நான்சொல்லுற இரண்டும் உண்மைதான் என்று கூறினார். அதை கேட்டதும் மோட்டார்சைக்கிள்வாலிபர், குறுக்கிட்டு கண்ணாயிரம் கவுசல்யாவிடம் மனைவி என்பதுதான் உண்மை. அவரது நண்பனின் மனைவி என்று சொல்வது போய். என்னிடம் போட்டோ ஆதாரம் இருக்கு என்று சொன்னான்.அதைகேட்ட அருவாஅமாவாசை என்ன போட்டோ ஆதாரமா கொடு என்று கேட்டார். கலியாணகார்டின் உள்பகுதி ஜெராக்ஸ்காப்பியை மோட்டார்சைக்கிள்வாலிபர் பையிலிருந்து எடுத்து கொடுத்தார்.அதைவாங்கி பார்த்த அருவா அமாசை அதிர்ச்சியில் நெஞ்சைபிடித்தபடி, அய்யோ நெஞ்சுவலிக்குதே என்றார். அந்தஜெராக்ஸ்காப்பியில் மணமகன்கண்ணாயிரம் என்ற இடத்தில் கண்ணாயிரம் படமும் மணமகள் என்ற இடத்தில் கவுசல்யா படமும் இருந்தது. (தொடரும்)

-வே. தபசுக்குமார். புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.