தீபாவளியை விடுமுறையாக அறிவிக்க கோரும் மசோதா அமெரிக்காவில் தாக்கல்
1 min read
A bill seeking to declare Diwali a holiday has been tabled in the United States
4.11.2021
அமெரிக்காவில் தீபாவளி அன்று விடுமுறையாக அறிவிக்கக் கோரும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க பாராளுமன்றம்
இந்திய வம்சாவளியரான அமெரிக்க காங்கிரஸ் எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்க பாராளுமன்றத்தில் தீபாவளி தினத்தன்று விடுமுறையாக அறிவிப்பது குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், கலாசாரம், வரலாறு மற்றும் சமய ரீதியாக தீபாவளிக்கு உள்ள முக்கியத்துவம் அந்த மசோதாவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கரோலின் மலோனி என்ற காங்கிரஸ் பெண் எம்.பி., தலைமையிலான குழு, இந்த மசோதா அமெரிக்காவின் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தது.