June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

நியூயார்க்:உலக வர்த்தகமைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

1 min read

New York: The first Diwali celebration at the World Trade Center

4.11.2021

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

தீபாவளி பண்டிகை

உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது சமீப காலமாக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் தங்களின் அதிபர் மாளிகைகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றன. அமெரிக்காவில் வசித்து வரும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மேலும்.அமெரிக்காவில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதற்கொண்டு அனைத்து அதிபர்களும் தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் அளித்து அதிபர் மாளிகையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

வர்த்தக மையம்

தற்போது நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாப்பட்டு உள்ளது.அந்த கட்டடத்தில் தீப விளக்கு எரிவதை போன்று அனிமேஷன் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் ஹட்சன் நதிக்கரையின் இருபுறத்திலும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *