August 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 10,229 பேருக்கு கொரோனா; 125 பேர் சாவு

1 min read

Corona for another 10,229 in India; 125 deaths

15.11.2021

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது புதிதாக 10,229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 125 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் சரிவு காணப்படுகிறது. கடந்த சனிக்கிழமை 11 ஆயிரத்து 850 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கழமை இந்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 271 ஆக சரிந்தது (இதில் கேரள மாநிலத்தில் மட்டுமே 6,468 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது).

இந்நிலையில் இந்தியாவில் இன்று மேலும் 10 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 229 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,47,536 ஆக அதிகரித்துள்ளது.

125 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,63,655 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.35 சதவீதம் ஆக உள்ளது.

இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,49,785 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.26 சதவீதமாக உள்ளது.

மேலும் கடந்த 17 மாதங்களில் குறைவான பதிவாக கொரோனா தொற்றுக்கு தற்போது 1,34,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,12,34,30,478 பேக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,20,119 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *