June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை தூக்கிலிட்டு கொன்ற நக்சலைட்டுகள்

1 min read

Naxalites hanged 4 members of the same family

15.11.2021
பீகாரில் பழிக்குப் பழியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை நக்சலைட்டுகள் தூக்கிலிட்டு கொன்றுள்ளனர்.

நக்சலைட்டுகள்

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள மனோபார் கிராமத் தில் போலீசார் 4 நக்சலைட்டுகளை கடந்த ஆண்டு என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அது போலி என்கவுண்ட்டர் என்று குற்றம் சாட்டிய நக்சலைட்டுகள், தங்களின் சகாக்கள் 4 பேர் தங்கியிருந்த வீட்டினர்தான் அவர்களுக்கு விஷம் வைத்து கொன்று விட்டனர். பின்னர் அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் போலி என்கவுண்ட்டர் நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று குற்றம் சாட்டியிருந்தனர்.

கொலை

இந்நிலையில் குறிப்பிட்ட குடும்பத் தலைவரான சர்ஜு சிங் போக்டா, அவரது மனைவி, 2 மகன்களை அவர்களது வீட்டுக்கு முன் நக்சலைட்டுகள் கடந்த சனிக்கிழமை இரவு தூக்கிலிட்டு கொன்றனர். பின்னர் வீட்டையும் குண்டு வைத்து தகர்த்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நக்சலைட்டுகளை தேடிவருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *