June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் இருந்து 4 நாடுகளுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி

1 min read

Corona vaccine exports back to 4 countries from India

புதுடெல்17.11.2021

இந்தியாவில் இருந்து 4 நாடுகளுக்கு இந்தியா மீண்டும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 113 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

பக்கத்து நாடுகளான பூடான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது. எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைப்பது சமமாக இருக்க வேண்டும் என்ற ‘கோவேக்ஸ்’ திட்டத்தின் அடிப்படையிலும், நன் கொடையாகவும் ஏப்ரல் வரை 3 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.

இதுதவிர 26 நாடுகளுக்கு 3 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டன.
மீண்டும்

கொரோனாவின் 2-வது அலை உச்சத்தில் இருந்ததால் தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தியது. இந்த நிலையில் இந்தியா மீண்டும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறது.
மியான்மர், வங்காள தேசம், நேபாளம், ஈரான் ஆகிய 4 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கியது.
இதேபோல ஆப்பிரிக்க நாடுகளுக்கு முதல் தடுப்பூசி டோஸ் இந்த வாரத்திற்குள் சென்று அடையும் என்று சீரம் நிறுவனத்தை சேர்ந்த புனவல்லார் தெரிவித்தார்.

இதேபோல சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் இந்த வாரத்தில் இந்தோனேஷியாவுக்கு செல்ல உள்ளது. 5 கோடி டோஸ்கள் அங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *