June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்

1 min read

Muneeswarnath Bandari appointed Chief Justice of Chennai High Court

17.11.2021

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனார். அவர் பொறுப்பேற்கும் வரை பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமை நீதிபதி

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி மேகாலயா ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பொறுப்பு காலியாக இருந்து வந்தது.

இதற்கிடையில், அகலாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக செயல்பட்டு வந்த முனீஸ்வர்நாத் பண்டாரி சென்னை ஐகோர்ட்டிற்கு நேற்று மாற்றப்பட்டார். அவர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகின.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

அலகாபாத்தில் இருந்து மாற்றலாகி வரும் முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் வரை சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *