June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசி உள்பட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; திருச்செந்தூர் கோவிலுக்குள் மழை நீர்

1 min read

Red Alert for Nellai, Tenkasi and Thoothukudi districts; Rain water inside the Thiruchendur temple

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், நாளை (நவ.,26) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்செந்தூர்

கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோவிலில் மழைநீர் புகுந்தது. பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

கோவிலின் உள் மற்றும் வெளி பிரகாரங்களில் மழை நீர் வரத்து அதிகரித்து கொண்டேயிருப்பதால் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை நீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *