June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

ரெயில்வே பிளாட்பார கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு

1 min read

Reduction of railway platform fare to Rs 10

25.11.2021

ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பிளாட்பார கட்டணம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலியால், மக்கள் அதிக அளவில் ரெயில் நிலையத்தில் கூடாமல் இருக்கும் வகையில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது.

இதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சென்னை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ரூ 50 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் ரூ10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *