தமிழகத்தில் இன்று 674 பேருக்கு கொரோனா; 13 பேர் சாவு
1 min read
Corona for 674 people in Tamil Nadu today; 13 dead
12/12/2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 681 ல் இருந்து 674 ஆக சற்று குறைந்துள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். 708 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,01,165 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,35,389 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் தற்போது வரை 5,54,96,026 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 393 பேர் ஆண்கள், 281 பேர் பெண்கள். தமிழகத்தில் 708 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,91,054 ஆக உயர்ந்துள்ளது.
13 பேர் சாவு
தமிழகத்தில் 13 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,612 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக இருந்த நிலையில் இன்று (டிச.,12 ம் தேதி) 116 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 102 பேருக்கும், ஈரோட்டில் 51 பேருக்கும், செங்கல்பட்டில் 48 பேருக்கும், திருப்பூரில் 47 பேருக்கும், நாமக்கலில் 45 பேருக்கும், சேலத்தில் 42 பேருக்கும், நெல்லையில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் ஒருவரு்க்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளத. தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை.