இந்தியாவில் புதிதாக 7,189 பேருக்கு கொரோனா;387 பேர் சாவு
1 min read
Corona for 7,189 new deaths in India; 387 deaths
25/12/2021
இந்தியாவில் புதிதாக 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 387 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் 2 நாள் ஏற்றத்துக்கு பின்னர் நேற்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. கடந்த வியாழக்கிழமை 7,495 பேருக்கு கொரோனா பாதித்தது. வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 6,650 ஆக சரிவு அடைந்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை மேலும் 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றைய பதிவைவிட 18.6 சதவீதம் உயர்வாகும். (இதில் கேரளாவில் மட்டும் 2,605 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).
இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 189 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,79,815 ஆக அதிகரித்துள்ளது.
387 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 387 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,79,520 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,286 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,42,23,263 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.40 சதவீதமாக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு 77,032 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,41,01,26,404 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,09,113 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 11,12,195 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 67,10,51,627 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
இதனிடையே தற்போது இந்தியாவின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.