காஷ்மீர் என்கவுண்டரி்ல் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
2 terrorists shot dead in Kashmir encounter
2.12.2021
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத ஒழிப்பு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து சோபியான் மாவட்டத்தில் நேற்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சவ்ஹம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
2 பேர் பலி
இந்த பதிலடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த இரண்டு பயங்கராவாதிகளும் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
என்கவுண்டர் நடைபெற்று வரும் பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.