தமிழ்நாட்டில் இன்று 619 பேருக்கு கொரோனா; 6 பேர் சாவு
1 min read
Corona for 619 people in Tamil Nadu today; 6 deaths
28.12.2021
தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் இன்று 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 605-ஐ விட அதிகம் ஆகும்.
இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 45 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 638 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 1 ஆயிரத்து 974 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 172 ஆக இருந்த நிலையில் இன்று 194 ஆக சற்று அதிகரித்துள்ளது.
6 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 84 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும், ஈரோட்டில் 40 பேருக்கும், நெல்லையில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 3 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.