இந்தியாவில் புதிதாக 6,358 பேருக்கு கொரோனா; 293 பேர் சாவு
1 min read
Corona for 6,358 newcomers in India; 293 deaths
28.12.2021
இந்தியாவில் மேலும் புதிதாக 6,358 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 293 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சனிக்கிழமை 7 ஆயிரத்துக்கு மேல் பதிவானது. ஞாயிற்றுக்கிழமை 6, 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று காலை இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து, 6, 531 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 6,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (இதில் கேரளாவில் மட்டும் 1,636 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 358 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,99,691 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 293 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,80,290 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6,450 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,42,43,945 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.40 % ஆக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு 75,456 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,42,46,81,736 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72,87,547 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 10,35,495 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 67,39,72,116 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.