தமிழகத்தில் இன்று 1,489 பேருக்கு கொரோனா; 8 பேர் சாவு
1 min read
Corona for 1,489 people in Tamil Nadu today; 8 people killed
1.1.2021
தமிழகத்தில் இன்று 1,489 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 611 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 1,155 பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 1,489 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் 1,03,607 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 1,470 பேர், வங்கதேசம் 6, ஐக்கிய அரபு எமிரேட் 4, இலங்கையில் வந்த ஒருவர் மற்றும் மேற்குவங்க மாநிலத்திலிருந்து வந்த 4 , டில்லி 3, ஜார்க்கண்ட் 1 என மொத்தம் 1,489 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,49,534 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,75,47,850 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 895 பேர் ஆண்கள், 594 பேர் பெண்கள். தமிழகத்தில் 611 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,04,410 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 8 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,784 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக இருந்த நிலையில் இன்று 682 ஆக சற்று அதிகரித்துள்ளது.
கோவையில் 682 பேருக்கும், கோவையில் 75 பேருக்கும், நெல்யைில் 3 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 4 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.