June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று கொரோனா 1,728 ஆக உயர்வு; 6 பேர் சாவு

1 min read

Corona rises to 1,728 in Tamil Nadu today; 6 deaths

3.1.2022
தமிழகத்தில் இன்று 1,728 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். 662பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 1,728 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் 1,03,119 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 1,727 பேர், ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து வந்த ஒருவரையும் சேர்த்து மொத்தம் 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,52,856 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 1012 பேர் ஆண்கள், 716 பேர் பெண்கள். தமிழகத்தில் 662 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,05,696 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 6 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,796 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 776 ஆக இருந்த நிலையில் இன்று 876 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 105 பேருக்கும், செங்கல்பட்டில் 158 பேருக்கும், திருவள்ளூரில் 80 பேருக்கும், கன்னியாகுமரியில் 48 பேருக்கும் ஈரோட்டில் 40 பேருக்கும், நெல்லையில் 17 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 36 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *