June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 2.34 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

1 min read

In Tamil Nadu, 2.34 lakh children have been vaccinated in a single day

3–.1.2022
தமிழ்நாட்டில் இன்று முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கிய நிலையில், ஒரேநாளில் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையவர்கள், 33.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கின.

2,34,175 பேர்

மொத்தமுள்ள 33 லட்சம் சிறார்களுக்கும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 2,34,175 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 22,310 பேருக்கும், குறைந்தபட்சமாக ராணிப்பேட்டையில் 1,886 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4,601 சிறார்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *