June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெயலலிதா இல்ல விவகாரம்: அ.தி.மு.க. மேல்முறையீடு மனு தள்ளுபடி

1 min read

Jayalalithaa home affair: AIADMK Dismissal of appeal

5.1.2022
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியதை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் எனக்கூறி அ.தி.மு.க., தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா வீடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள, உள்ள வேதா நிலையமாக மாற்றுவதற்கு அரசு கையகப்படுத்தியது. அரசின் கையகபடுத்தும் நடவடிக்கையை எதிர்த்தும் வேதா நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையை கைவிட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரியும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா மற்றும் தீபக் வழக்கு தொடர்ந்தனர்.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதி சேஷாயி, கையகபடுத்தும் உத்தரவை ரத்து செய்து, இல்லத்தின் சாவிகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மேல்முறையீடு

இதனை எதிர்த்து அதிமுக சார்பிலும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு: ஜெயலலிதா இல்லம் பொது நோக்கம் இன்றி அரசியல் காரணங்களுக்காகவே கையகபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நினைவிடம் இருக்கும் நிலையில், இரண்டாவது நினைவிடம் தேவையற்றது எனக்கூறி தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லும் எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *