May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,623 ஆக அதிகரிப்பு

1 min read

Increase the number of omega vulnerabilities in India to 3,623

9.1.2022
இந்தியாவில் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான்

ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, அரியானா, ஒடிசா, உத்தரபிரதேசம், ஆந்திரா, உள்ளிட்ட 27 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் தனது காலடித் தடத்தை பதித்துள்ளது.

இதில் மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள், ஒமைக்ரானின் மோசமான பாதிப்புக்குள்ளான முதல் 5 மாநிலங்கள் ஆகும். இந்நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை இந்திய மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு;-

மராட்டிய மாநிலம் – 1,009 பேர்
டெல்லி – 513 பேர்
கர்நாடகா – 441 பேர்
ராஜஸ்தான்- 373 பேர்
கேரளா – 333 பேர்
குஜராத் – 204 பேர்
தமிழ்நாடு – 185 பேர்
அரியானா – 123 பேர்
தெலுங்கானா – 123 பேர்
உத்தரபிரதேசம்- 113 பேர்
ஒடிசா – 60 பேர்
ஆந்திரா – 28 பேர்
பஞ்சாப் – 60 பேர்
மேற்கு வங்காளம்- 27 பேர்
கோவா – 19 பேர்
அசாம் – 9 பேர்
மத்திய பிரதேசம்- 9 பேர்
உத்தரகாண்ட் – 8 பேர்
மேகாலயா – 4 பேர்
அந்தமான், நிகோபார் தீவுகள் – 3 பேர்
சண்டிகார் – 3 பேர்
காஷ்மீர் – 3 பேர்
புதுச்சேரி- 2 பேர்
சட்டிஸ்கர் – 1
இமாச்சல பிரதேம் – 1
லடாக் – 1
மணிப்பூர் – 1
மேலும் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 3,623 பேரில் இதுவரை 1,409 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.