June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை கலங்கவைத்த செல்போன்குரல்/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram Confused for cell phone tone. / Story by Thabasukumar

11.1.2022
கண்ணாயிரமும் பூங்கொடியும் கொரானா ஊசிபோட்டதும் மருத்துவமுகாமிலிருந்து வீட்டுக்கு நடந்துவந்தனர். கண்ணாயிரம் நடந்துவந்த களைப்பு நீங்க காபி கேட்டார். ஆனால் அவருக்கு சுகர் இருக்கு என்று சொல்லி அவரது மனைவி பூங்கொடி காபி கொடுக்க மறுத்தார். மேலும் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது ; அரிசிசாதம் சாப்பிடக்கூடாது ;என்றார். பாகற்காய்சூப்பு குடிக்கணும் கோதுமை தோசைசாப்பிடணும் நெல்லிக்காய்;நாவல் பழம் சாப்பிடலாம்; வெண்டைக்காய் சாப்பிடலாம் என்று அடுக்கிகொண்டே போனார். கண்ணாயிரத்துக்கு மூன்றுவேளையும் அரிசி சோறு சாப்பிடணுமுன்னு ஆசை. இனி அரிசி சோறு கிடையாது என்றவுடன் அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. பத்திய சாப்பாடு மாதிரி சாப்பிடணுமுன்னு சொன்னவுடன் ம்..அது சரிப்பட்டு வராது. வாரத்துக்கு ஒரு நாள் வேணுமுன்னா கோதுமை தோசைசாப்பிடுறன் என்றார் கண்ணாயிரம். அதைகேட்டதும் பூங்கொடி கோபத்தில் அதெல்லாம் முடியாது. அரிசாதம் சாப்பிட்டால் சுகர் அதிகம் ஆகும் .பிறகு கண்பார்வை மங்கும்.காலில் புண்வந்தா ஆறாது என்றார்.
உடனே கண்ணாயிரம் .ம்..அப்படியா.அவ்வளவு இருக்கா..எனக்கு தெரியாம போச்சு.. என்றார் பூங்கொடி.
உடனேஅதுமட்டுமா. தினமும் காலையிலே வியர்க்க வியர்க்க நடக்கணும் .வியர்வை வெளியேறினாதான் சுகர் குறையும் புரியுதா என்றார்.
கண்ணாயிரம் பதிலுக்கு எல்லாம் சரிதான் நான் வாக்கிங் போனால் நாய் கடிக்குமே.நாய்கடிச்சா புண்ணு ஆறாதே என்று அப்பாவியாக கேட்டார்
.
அப்போது பூங்கொடி மொபைல் போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதை பார்த்த பூங்கொடி ஏங்க கொரானா ஊசி போட்டதுக்கு எனக்கு மெசேஜ் வந்திருக்கு…என்று சொன்னவர் செல்போனில் முக்கிய செய்தி வந்திருக்கா இணையதளத்தில் தேடினார்.
அப்போது செய்திசாரலில் கழுதைகளைதேடும் போலீஸ் என்ற செய்திவந்திருந்தது.அதை பார்த்ததும் பூங்கொடி உற்சாகமாக செய்தியைபடித்தார். பின்னர் கண்ணாயிரத்தைபார்த்து ஏங்க வடநாட்டிலே ஒரு இடத்திலே நிறைய கழுதைகளை காணமாம்..போலீஸ்காரங்க தேடிக்கிட்டு இருக்காங்களாம் .இன்னும் கண்டுபிடிக்க முடியலையாம். நீங்க காணம போன பஞ்சகல்யாணி கழுதைய கண்டு பிடிச்சு கொடுத்தீங்களே. அதேமாதிரி இந்த கழுதைகளையும் கண்டுபிடிச்சு கொடுங்க.உங்களுக்கு பரிசு கொடுப்பாங்க ..பத்திரிக்கையிலேயும் உங்க படம் பெயர் போடுவாங்க என்று சிரித்து கொண்டே சொன்னார்.

கண்ணாயிரம்..அப்படியா..வடநாட்டிலேயா..கழுதையை மொத்தமா கடத்திட்டுபோயிட்டாங்களா..கழுதை எவ்வளவு கஷ்டப்படும் என்று வருத்தப்பட்டார்.
பூங்கொடி உடனே கழுதைகளை கண்டுபிடிக்க போறீங்களா.. நீங்க போனா கண்டுபிடிச்சிடுவீங்க..முயற்சி பண்ணுங்க என்றார்.

கண்ணாயிரம் உடனே ம்..முயற்சிபண்ணலாம்..அதுவடநாட்டில் உள்ள கழுதை அதை எப்படி கண்டுபிடிக்கலாமுன்னு கொஞ்சம் யோசிக்கணும்..என்று சொன்னார்.ம். சரி.நல்லா யோசிங்க..கழுதையை கண்டுபிடிச்சுட்டா கனமா கொடுப்பாங்கா. அரிய வாய்ப்பைதவறவிடாதீங்க என்றார் பூங்கொடி.
அதை கேட்டதும் கண்ணாயிரம்,நான் முயற்சி பண்ணுறன்.ஆனா ஒண்ணு..இந்த சுகருக்குரிய பத்திய சாப்பாட்டை இன்னைக்கே சாப்பிடுன்னு சொல்லக்கூடாது .இன்னைக்குதான் கொரானாவுக்கு ஊசி போட்டிருக்கேன்..இந்த நேரத்திலே பத்திய சாப்பாடு வேண்டும்.ஒருவாரம் போகட்டும்.ஒரு நல்ல நாள்பார்த்து அந்த சாப்பாடு சாப்பிட ஆரம்பிக்கிறேன் என்று சொன்னார்.பூங்கோடியும் சரி,ஒருவாரம் போகட்டும்.
ஆமா.நீங்க கொரானா ஊசி போட்டிங்களா..இல்லையா..உங்க போனில் மெசேஜ் வந்துச்சா.இல்லையா..என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே பெட்டியிலே பூட்டிவைச்சிருக்க போனை பார்க்கல.அதை எடுத்துட்டுவர்ரேன் என்றார்.சீக்கிரம் எடுத்துட்டு வாங்க.போன் திருட்டுபோயிடுமுன்னு பூட்டி,பூட்டி வைக்காதீங்க.போனை பயன்படுத்துங்க என்று பூங்கொடி சத்தம்போட்டார். கண்ணாயிரம் வீட்டில் உள்ள பெட்டியை திறந்து அதில் இருந்த செல்போனை எடுத்துவந்து பூங்கொடியிடம் கொடுத்தார்.அவர் செல்போனை வாங்கி பட்டனை அழுத்திபார்த்தார். சார்ஜ் இல்லை என்று தெரிய வந்தது. ஏங்க..முதலில் செல்போனை சார்ஜரில் போடுங்க..சார்ஜெ இல்லை என்றார். சார்ஜ் இறங்கிடுமுன்னு செல்போனில் பேசாம இருந்தேன். எப்படி சார்ஜ் இறங்கிச்சு.. என்று சொன்ன கண்ணாயிரம் செல்போனுக்குரிய சார்ஜரை தேடினார்.
வெள்ளைநிற சார்ஜரை எடுத்த கண்ணாயிரத்தை பார்த்த பூங்கொடி ஏங்க அது என் சார்ஜரு. அதிலெ என் பெயர் எழுதியிருக்கு ருங்க..என்றார்.
கண்ணாயிரம்..ஆமா..பூங்கொடின்னு எழுதியிருக்கு.அப்போ என் ஜார்ஜரை எங்கே என்று கேட்டார். அதையும் பெட்டியிலேபோட்டு பூட்டிவைச்சிருப்பீங்க..போய்பாருங்க என்றார் பூங்கொடி.
உடனே கண்ணாயிரம் பெட்டியை மீண்டும் திறந்து பார்த்தார்.துணிக்குள் மறைத்துவைத்திருந்த சார்ஜரை தேடி எடுத்தார்.ம்..ஞாபக மறதி அதிகமாச்சு.என்று சொல்லியபடி சேல்போனுக்கு சார்ஜ் போட்டார்.
சார்ஜ் ஏறியது.என் சார்ஜருக்கும் பெயர் எழுதணும்.அப்பதான் கண்டுபிடிக்கமுடியும் என்று கண்ணாயிரம் சோன்னார். செல்போனில் சார்ஜ் ஏறியதும் கண்ணாயிரம் செல்போனை பூங்கொடியிடம் கொடுத்து மெசேஜ் வந்திருக்கா பார் என்றார். பூங்கொடி செல்போனைவாங்கி பட்டனை அழுத்தி மெசேஜ் வந்திருக்கா என்று பார்த்தார். கொரானா ஊசி போட்டதற்கான தகவல்வரவில்லை.ஏங்க ஊசி போட்டியளா இல்லையா..சும்மா ஏமாத்திரியளா என்று பூங்கொடி கேட்டார். உடனே கண்ணாயிரம் கையில் ஊசி போட்ட இடத்தை காட்டி எவ்வளவு வீங்கியிருக்கு பாரு.வலிக்குது என்று சொன்னார்.பிறகு ஏன் மெசேஜ் வரலை..இப்பதான செல்போனை ஆன்பண்ணியிருக்கோம்.மெதுவா வரும் என்றார்.
கண்ணாயிரம் சரி பொறுத்திருந்து பார்ப்போம் என்றபடி நாற்காலியில் அமர்ந்தார்.
அப்போது செல்போன் ஒலித்தது.பூங்கொடி செல்போனை எடுத்து ஹலோ என்றார்.பின்னர் ஏங்க யாரோ இந்தியிலே பேசுறாங்க.அந்த கழுதையை கண்டுபிடிக்க சொல்லி கேட்காங்கன்னு நினைக்கிறேன்..இன்னாங்க நீங்களும் பேசுங்க..சும்மா அச்சா அச்சான்னு சொல்லுங்க என்றார்.
கண்ணாயிரம் செல்போனை வாங்கி பேசினார்.எதிர்முனையில் பேசியவர் என்ன பேசினார் என்றே புரியவில்லை.கண்ணாயிரம் ம்.சரி,அச்சா நல்லது என்று மனம் போல் பேசினார்.பூங்கொடி போனை வாங்கி அச்சா,அச்சா என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
கண்ணாயிரம் மெதுவாக சொன்னது எதுவும் புரிஞ்சுதா என்று கேட்டார்.பூங்கொடி புரியலங்க.பக்கத்து வீட்டு அக்காவுக்கு இந்தி நல்லா தெரியும்.அடுத்து போன்வந்தா அவங்ககிட்ட போய் பேசசொல்வோம் என்றார் பூங்கொடி.அதுவும் சரிதான் என்றார் கண்ணாயிரம்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்போன் ஒலித்தது.பூங்கொடி எடுத்து பேசினார்.அதே இந்தி குரல். ஏங்கே அதே ஆள்தான் பேசுறாரு..பக்கத்து வீட்டு அக்காகிட்ட கொடுத்து பேச சொல்லுறன் என்று சொல்லிவிட்டு பூங்கொடி போனை எடுத்துகொண்டு வெளியே போனார்.பக்கத்து வீட்டு அக்கா வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். பூங்கொடி அவரிடம் அக்கா அக்கா இந்தியிலே ஏதோ பேசுறாங்க.புரியல.கொஞ்சம் கேட்டு சொல்லுங்க என்றார்.அவர் போனை வாங்கி பேசினார்.எதிர் முனையில் இந்தியில் பேசியதை கேட்டுவிட்டு உங்க ஆதார் எண்,ஏடி எம் நம்பர் கேட்கிறான்..உங்க ஏடி எம் கார்டை செல்லாது. புதுப்பிக்கணும் அப்படின்னு சொல்லுறான். என்றார்.
பூங்கொடி உடனே ஏடிஎம் கார்டு புதுசாதானே இருக்கு.மறுபடி ஏன் புதுப்பிக்கணும் ..என்று கேட்டார்.அதற்கு அவர்..பூங்கொடி..பேங்கில நீ போட்டுவச்சிருக்கிற பணத்தை அபேஸ்பண்ண அப்படி கேட்கிறான். நான் கட் பண்ணிடுறன். இனி பேங் ஏடி கார்டு நம்பருன்னு யார் செல்போனில் கேட்டாலும் சொல்லாதீங்க என்றார்.பூங்கொடி அவரைபார்த்து நல்லது அக்கா.ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு செல்போனுடன் வீட்டுக்கு வந்தார்.
கண்ணாயிரத்திடம இந்தியில் வந்த குரல் பற்றி விளக்கினார். அதை கேட்ட கண்ணாயிரம்…ம்..ஏதோ கொஞ்சம் ரூபா வச்சிருக்கோம்.அதை பறிக்க பாக்காங்களா.நம்மகிட்ட நடக்குமா என்றார்.
சிறிது நேரம் கழிந்ததும் மறுபடியும் செல்போன் ஒலித்தது.பூங்கொடி எடுத்து பேசினார்.மலையாளம் கலந்த தமிழில் ஒருபெண் பேசினார். நான்பேங் மேனேஜர்பேசுது..உங்க ஏடிஎம் கார்டு நம்பர் சொல்லுது.புது கார்டுவாங்கியாச்சா. நம்பர் சொல்லு..இரண்டு நாளிலா புதுகார்டுவாங்கலன்னொ.பணம் எடுக்கில்லா என்றது அந்த குரல்.பூங்கொடி அதிர்ச்சியில் ஏங்க மறுபடியும் ஏடிஎம் நம்பர் கேட்கிறாங்க..நான் என்ன செய்வேன் என்று கத்தினார். கண்ணாயிரம் சொல்லாதே.சொல்லாதே என்றார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.