June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலம் இடிந்தது

1 min read

The new bridge being built across the Kollidam river collapsed

22.1.2022

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விபத்துக்குள்ளானது.

பாலம்

தஞ்சை மாவட்டத்தை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுடன் இணைக்கும் வகையில் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கரையில் பாலம் கட்டப்பட்டு வந்தது. பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் புதிய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.பாலத்தின் சிமெண்ட் பலகை இடிந்து விழுந்தது.
புதிய பாலத்தின் 5வது தூண் அருகே இணைப்புக்காக போடப்பட்டிருந்த சிமெண்ட் பலகை இடிந்து ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

பாலம் இடிந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *