May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆப்கானிஸ்தானில் அரசு பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு; மாணவிகள் நிலை என்ன?

1 min read

Government universities reopen in Afghanistan; What is the status of students?

31.1.2022

ஆப்கானிஸ்தானில் அரசு பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு என தலீபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் மாணவி வகுப்புகளுக்கு வருவது குறித்து எந்த பதிலும் இல்லை அளிக்கப்படவில்லை.

பல்கலைக்கழகங்கள்

ஆப்கானிஸ்தானை மூடப்பட்டுள்ள அரசு பல்கலைக்கழகங்கள் பிப்ரவரியில் மீண்டும் திறக்கப்படும் என்று தலீபான்களின் தற்காலிக உயர்கல்வி மந்திரி நேற்று தெரிவித்தார். அதேவேளை பல்கலைக்கழக வகுப்புகளில் மாணவிகள் பங்கேற்பார்களா? அவர்களுக்கு அனுமதி அளிக்கபடுமா என்பது குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து, தலைநகர் காபூலில் மந்திரி ஷேக் அப்துல் பாக்கி ஹக்கானி செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘பிப்ரவரி 2 முதல் வெப்பமான மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும், அதே நேரத்தில் குளிர் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் பிப்ரவரி 26 அன்று திறக்கப்படும்’ என்றார்.

பெண்கள்

மாணவிகள் வகுப்புகளில் பங்கேற்பது குறித்து என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறவில்லை. கடந்த காலங்களில் தலீபான் அதிகாரிகள் பெண்களுக்கு தனி வகுப்புகளில் கல்வி கற்பிக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

இதுவரை தலீபான் அரசாங்கம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளை மட்டும் மீண்டும் திறந்துள்ளது. சில தனியார் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் பல இடங்களில் மாணவிகளால் வகுப்புக்கு செல்ல முடியவில்லை.

ஆப்கானிஸ்தான் அரசின் வெளிநாடு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால், உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என தலீபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை பெண்கள் கல்வியை தலீபான்கள் உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.