May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா 2,9,918 பேராக குறைந்தது

1 min read

The daily corona in India dropped to 2,9,918

31/1/2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு நாளில் 2,9,918 பேருக்கு தொற்று இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்று பாதிப்பான 2 லட்சத்து 34 ஆயிரத்து 281 மற்றும் சனிக்கிழமை பாதிப்பான 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 – ஐ விட குறைவாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 13 லட்சத்து 2 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 62 ஆயிரத்து 628 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 76 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 31 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

959 பேர் சாவு

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 959 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 166 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 227 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.