June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

பேஸ்புக் நிறுவனரின் சொத்து மதிப்பு அம்பானி, அதானிக்கு கீழே சரிந்தது

1 min read

The property value of the Facebook founder fell below Ambani, Adani

4.2.2022-
பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்ததால், அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு இந்தியாவின் முகேஷ் அம்பானி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பை விடவும் கீழே சரிந்துள்ளது.

பேஸ்புக் அதிபர்

பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு டிக்டாக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம். மேலும் விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்துள்ளனர். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதனால் சுமார் 20,000 கோடி டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சரிந்தது

இதன் எதிரொலியாக பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு 8500 கோடி டாலராகச் சரிந்துள்ளதாக போர்பஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு இந்தியாவின் முகேஷ் அம்பானி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பை விடவும் கீழே சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *