June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா; 25 பேர் சாவு

1 min read

Corona for 3,086 people in Tamil Nadu today; 25 deaths

11.2.2022
தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 25 பேர் உயிரிழந்துள்ளனர். 14,051 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 3,592 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 3,086 ஆக குறைந்துள்ளது.

கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,06,514 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 3,086 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,31,154 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,30,87,051 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,840 பேர் ஆண்கள், 1,246 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 14,051 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,37,265 ஆக உயர்ந்துள்ளது.

25 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 25 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,887 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 663 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 11 ம் தேதி) 590 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் 34 பேருக்கும் தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 19 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *